MYPNOWed03212018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மாத்தி யோசி...மை டியர் ப்ளஸ் 2 ஸ்டூடண்ட்ஸ்...

  • PDF

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருக்கும் மாணவர்களே. உங்களுக்காக இந்த மடல்...

ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி +2 முடிச்சதும் பெருவாரியா கேக்குற குரல் "இன்ஜினியரிங்... இன்ஜினியரிங்""" தற்போதும் அந்த குரல் ஓய்ந்த பாடில்லை எனினும் மற்றொரு பக்கம் இந்த பத்து வருஷத்துல பாதிக்க பட்டவங்க பொத்தாம் பொதுவா இன்ஜினியரிங்கே வேணாம் , தண்டம்னு சொல்றதயும் பாக்க முடியுது....

என்னோட கருத்த நானும் சொல்லிடறேன்.
Engineering is a best course but Tamil Nadu is a worst Place to learn it. இத எந்த மகானும் சொல்லல நான் தான் சொல்றேன். தமிழ்நாட்டுல இன்ஜினியரிங் படிக்கணும்னு நினைக்கிறவங்க, ஒன்னு அரசு பொறியியல் கல்லூரிகள்ள இடம் கிடைக்கிற அளவுக்கு அதிக கட்ஆப் எடுத்திருக்கணும் அல்லது VIT, Sathyabaama  போன்ற பெரிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் அளவிற்கு வசதி படைத்திருக்க வேண்டும். இது அல்லாமல் குறைந்த கட்ஆப் எடுத்து பெட்ருமாஸ் லைட்டே தான் வேணும்னு தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் கூடைகாரங்களே வாழ்கையின் ஒரு ஐந்து வருடத்தை வீணாக்க போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த விஷயத்துக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சில தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டுமே விதிவிலக்கு....

 

 இன்னொன்னும் சொல்றேன் இன்ஜினியரிங் மட்டுமே படிப்பும் அல்ல பல அருமையான கலை அறிவியில் படிப்புகள் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதையெல்லாம் நாம சீண்டுறது கூட இல்ல. எத்தனையோ வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் பல துறைகள் இங்கு உள்ளது.
B.Sc(Visual Communication, Mass media, Nautical Science, Applied Plant Biology, bio Chemistry, Medical biotechnologuy, bio Informatics, Food technology, Geology, etc)
BA (Political Science, Social Work, Psychology, …)
 இது எல்லாம் ஓரளவு எனக்கு தெரிந்தவை மட்டுமே. நான்கு வருடம் பொறியியல் படிப்பதை விட கலை அறிவியலில் இத்தகைய வித்தியாசமான பாடங்கள் படித்து அது சம்மந்தாமான சில மாத கோர்ஸ் முடித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம்.

இத்தகைய விஷயங்கள் புரியாத பெற்றோர்களுக்கு சொல்லி புரிய வையுங்கள். அதற்கு முதலில் உங்களுக்கு அது குறித்த தேடல் இருக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள "மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க்கில்” B.Sc சோசியல் ஒர்க் படிக்க விண்ணப்பிக்க ஒரு மாணவர் எனது அலுவலகம் வந்தார். இந்த படிப்பை உங்களுக்கு யார் சொன்னது என்றதற்கு “ எனக்கு HR ஆகணும்னு ஆசை, UGல இந்த DEPT படிச்சு PG la HR படிச்சா நல்லா இருக்கும்னு தான்”னு அந்த பையன் சொன்னான்.

தான் என்னவாக வேண்டும் என்பதை முடிவெடுத்து அதன் படி பாதையை முடிவு செய்வதே புத்திசாலித்தனம். வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக சீக்கிய இனத்தவர்களை பாருங்கள், 8ஆவது முதலே IAS, IFS, போன்ற அரசு வேலைகளை குறிவைத்து தங்களுடைய படிப்புகளை அமைத்துகொள்வார்கள்.
IAS போன்றவற்றிற்கு ஆசையுள்ளவர்கள் BA(history)எடுத்து படிக்கலாம், தேர்வுக்கான தயாரிப்புகளுக்கு அதிக நேரம் கிடைக்கும்.
இப்போதும் சொல்கிறேன் இன்ஜினியரிங் ஒரு அருமையான துறை ஆனால் அது மட்டுமே படிப்பல்ல.

படிப்பு மட்டுமே கூட வாழ்க்கை இல்லை என்னும் போது ஒரு குறிப்பிட்ட துறை தான் வாழ்க்கை என்பதை விட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை. காலம் மாறுகிறது காலத்திற்க்கேற்ப நம்மை தகவமைத்துக்கொல்வதே புத்திசாலித்தனம்.

வாய்ப்புகள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன , தேவை தேடல்களே....


 

புதன்கிழமை, 20 மே 2015 12:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh