MYPNO



Wed03212018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

அறியாத துறைகள்... அதிகமான வேலை வாய்ப்புகள்!

  • PDF
கல்வி என்றவுடன் அதிகம் பேசப்படும் தளங்கள் தவிர்த்து, அறியப்படாத துறைகள் பற்றிய தகவல்கள் தந்தார், கல்வி ஆர்வலர் கிர்த்திகாதரன். 

‘‘முதலாவதாக, பள்ளிக் கல்வி பற்றியும் கொஞ்சம் பேசியாக வேண்டும். அதாவது, பல்வேறு சிலபஸ்கள் பெருகியுள்ள இந்தக் காலத்தில், பிள்ளையை எந்த சிலபஸில் விடுவது என்பது பல பெற்றோரின் குழப்பம். அப்படியே ஒரு சிலபஸில் சேர்த்தாலும், அதன் பயன் என்ன என்பதும் பலருக்குத் தெரிந்திருப்பதில்லை’’ என்று ஆரம்பித்தவர்...

‘‘உங்கள் பிள்ளை தமிழ்நாட்டில்தான் வேலை பார்க்கப் போகிறார் என்றால், பதினோறாம் வகுப்பிற்கு மெட்ரிக், ஸ்டேட் போர்டு என மாநிலக் கல்வியைத் தேர்வு செய்யலாம். இந்திய அளவிலான படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு சென்ட்ரல் போர்டு சிலபஸான சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பாட முறையைத் தேர்வு செய்யலாம். வெளிநாட்டு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு இன்டர்னேஷனல் சிலபஸான ஐ.ஜி.சி.எஸ்.இ. (international general certificate of secondary education) மற்றும் ஐ.பி. (international baccalaureate) சிலபஸை தேர்வு செய்யலாம். இதற்கான கட்டணங்களுக்கு பொருளாதார வளம் அவசியம். ஸ்டேட் போர்டு, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. சிலபஸில் படித்தவர்களுக்கும் தேசிய, சர்வதேச மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள் உண்டு என்றாலும், இந்த சிலபஸ்கள் பள்ளிப் பருவத்தில் இருந்தே அதற்குத் தயார்படுத்தும். 

அடுத்ததாக... பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும்போது, கல்லூரிப் படிப்பில் உங்கள் பிள்ளைகளுக்கு விருப்பமான துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஆனால், அந்தத் துறை பற்றி அவர்கள் எந்தளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது அவசியம். ‘என் ஃப்ரெண்ட் ஏரோநாட்டிக்கல் கோர்ஸ் தான் எடுக்கப் போறான்’, ‘என் தோழியோட அக்கா டெக்ஸ்டைல் இன்ஜீனியரிங் படிச்சிட்டு நிறைய சம்பாதிக்கிறாங்க’ போன்ற நுனிப்புல் தகவல்களின் அடிப்படையில் ஒரு படிப்பின் மீது விருப்பமாக இருக்கும் பிள்ளைகளுக்கு, அந்தத் துறையில் படித்த உடன் வேலை கிடைத்துவிடுமா அல்லது மேற்படிப்புப் படிக்க வேண்டுமா, என்னென்ன பாட உட்பிரிவுகள் அடங்கும், புராஜெக்ட் எப்படி இருக்கும், ஆரம்ப வேலைவாய்ப்பும், சம்பளமும் எப்படி இருக்கும் என்ற முழு விபரங்களையும் அறியச் செய்யுங்கள்.

ஒரு முழுமையான பிம்பம் கிடைத்த பின்னும், ‘இந்த எல்லா சவால்களையும் தாண்டி இதில் சாதிப்பேன்’ என்று அவர்கள் உறுதியாக இருந்தால், பச்சைக் கொடி காட்டுங்கள்’’ என்ற கிர்த்திகா, பொறியியல், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற அறியப்பட்ட படிப்புகள் தவிர்த்து, வாய்ப்புகள் அதிகம், ஆனால் அறியப்படாத படிப்புகள் சிலவற்றைப் பேசினார். 

பெட்ரோலியம் இன்ஜினீயரிங்

''பிளஸ் டூவில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களைப் படித்தவர்கள்,  பி.டெக்., பெட்ரோலியம் இன்ஜினீயரிங் படிக்கலாம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டட், பிரிட்டிஷ் பெல்லோ பெட்ரோலியம், ஆயில் அண்ட் கேஸ் நேச்சுரல் போன்ற பெரிய நிறுவனங்களில் கெமிக்கல் இன்ஜினீயர், பிளாக் அனலிஸ்ட் போன்ற பணி வாய்புகள் உண்டு. வெளிநாட்டு பெட்ரோலிய நிறுவனங்களிலும் வேலை பார்க்கலாம். 10,000 முதல் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். சாராசரியாக மாதம் 50,000 சம்பாதிக்க வைக்கும் துறை இது. 

உணவுத் தொழில்நுட்பம்!

பிளஸ் டூவில் அறிவியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பி.எஸ்சி., ஃபுட் டெக்னாலஜி, பி.டெக்., ஃபுட் டெக்னாலஜி படிக்கலாம். இந்தத் துறையில் உணவுப் பாதுகாப்பு, பதப்படுத்துவது, விநியோகம், தரம் ஆராய்வது, பேக்கிங் என பல வேலைகள் உண்டு. தனியார், உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுடன்  உணவுப் பாதுகாப்புத் துறை, பால்வளத் துறை போன்ற அரசுத் துறைப் பணியும் பெறலாம். ஆராய்ச்சித் துறையிலும் செல்லலாம். மாதம் குறைந்தது 20,000 முதல் சம்பாதிக்கலாம். 

கம்பெனி செக்ரட்டரி (சி.எஸ்)!

அரசு, தனியார் நிறுவனங்களில் அட்வைஸர், மேலாண்மை என உயர் பொறுப்புகளுக்கு தகுதிப்படுத்தும் படிப்பு, கம்பெனி செக்ரட்டரி. பி.காம், எம்.காம் படித்துக்கொண்டே எக்ஸிகியூடிவ், ப்ரொபஷனல் தேர்வுகள் எழுதலாம். ப்ளஸ் டூ முடித்தவர்கள் கூட பவுண்டேசன் தேர்வுகள் எழுத முடியும். இவர்கள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (institute of company secretaries of india) நடத்தும் தேர்வில் பாஸாக வேண்டும். இவர்களுக்கு ஆரம்பித்திலேயே 30,000 முதல் சம்பளம் இருக்கும். சி.ஏ. போல் தான் இந்த படிப்பும்.  இதற்கென இருக்கும் தனியார்  இன்ஸ்டிட்யூட்களில் படிக்க முடியும்.  இதை தவிர எம்.காம் முடித்துவிட்டு கார்ப்பெரேட் செகரட்டரி கோர்ஸ் படிப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கு.

மருத்துவம்

மருத்துவர், செவிலியர் மட்டுமல்ல, காத் லேப் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எக்கோ டெக்னாலஜி என இதில் பல நவீனப் தொழில்நுட்பப் பிரிவுகள் உள்ளன. எல்லா மருத்துவமனைகளிலும் இந்த வேலைவாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டில் அதிக வாய்ப்புகள் உண்டு. உள்நாட்டில் குறைந்தது 10,000 ஆயிரம் முதல் சம்பளம் இருக்கும்... ஆனா, வெளிநாடுகளில் இதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கு. அதனால், குறைந்தது 50,000 முதல் சம்பளம் கிடைக்கும்.

ஜியாலஜிக்கல் சயின்ஸ்

பிளஸ் டூவில் அறிவியல் பிரிவுகள் படித்தவர்கள், பி.எஸ்சி., எம்.டெக். ஜியாலஜிக்கல் சயின்ஸ் படிக்கலாம். குறிப்பிட்ட பெரிய பல்கலைகழகங்களில் மட்டுமே வழங்கப்படும் இந்தப் படிப்பு. கடல், மலை, நிலம், பூகம்பம், நிலக்கரி போன்ற ஆராய்ச்சி, ஒரு இடத்தை பற்றின டேட்டா சேகரிப்பது போன்றவை பணி இயல்பு. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புண்டு. சென்ட்ரல் கவர்மெண்ட் வாட்டர் போர்டு மற்றும் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா என  மத்திய அரசு பணிகளில் கூட ஜியாலஜிஸ்ட்க்கு இடம் உண்டு'' என்று விவரித்த கிர்த்திகாதரன், மாணவர்களுக்கு 'ஆல் த பெஸ்ட்!' சொல்லி முடித்தார்.

- கே. அபிநயா

Add comment


Security code
Refresh