Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இணைய உலகில் புதுப் புரட்சி: WiFiஐ விட அதிவேகமான Li-Fi

  • PDF
“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்).
 
இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக இருப்பதால் பல பேர் தங்கள் இல்லங்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு “WiFi” ஐ தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
 
இந்த சேவையை பெற phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க இந்த சேவை அனுமதிக்கிறது.
 
பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிமுகப்படுத்தி wi-fi சேவையை வழங்குவதால், இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் wifi என்பது மிக முக்கியமாக இன்றியமையாத ஒரு சாதனமாக இருந்து வருகிறது.
 
தற்போது ‘Wi-Fi’ வை விட 100 மடங்கு வேகம் கொண்ட தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு ‘Li-Fi’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
‘Wi-Fi’ இல் 1 ஜி.பி தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அதை விட 100 இல் 1 மடங்குதான் ‘Li-Fi’ நேரம் எடுத்துக் கொள்கிறது. தகவல் தொழில் நுட்பத்தில் ‘Li-Fi’ புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add comment


Security code
Refresh