Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பெற்றோர்களே! இந்த உலகில் மனிதப்போர்வையில் விலங்குகள் அதிகம் நடமாடுகின்றன!!

  • PDF
“I made a major mistake in judgment”

இப்படி சொன்னது ஒரு நீதிபதி என்று நீங்கள் நினைத்திருந்தால் அது  தவறு.

இது நீதிபதியைப் பார்த்து ஒரு குற்றவாளி சொன்னது. அந்தக் குற்றவாளி அமெரிக்காவைச் சார்ந்த க்ரிஸ்டோஃபர் லான்னிங்(படம்).

40 வயதான லான்னிங் அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தின் கேன்சஸ் நகரில் வசிப்பவன். இவனை ஃப்ளோரிடா மாகாணத்தின் லாங்வுட் நகர காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்திய போது சொன்ன ‘டயலாக்’ தான் நீங்கள் மேலே படித்தது. என்ன குற்றம் செய்தான்??

இவனின் வேலையே ஆன்லைனில் பெண்களோடு அரட்டை அடிப்பது. பின்பு அவர்களைக் கொள்ளையடிப்பது.  வழக்கம்போல இவன் தூண்டில் போடுவதாய் நினைத்து, நேற்று முன் தினம் (10-04-2014) ஒரு 14 வயது சிறுமியிடம் இவன் மாட்டிக்கொண்டான்.

ஒருமாதமாய் இவனிடமிருந்து வந்த ‘தொல்லை’அழைப்பின் காரணமாக அந்தச் சிறுமி லாங்வுட் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். காவலர்கள் இவனை பிடிக்கத் திட்டமிட்டனர்.

அத்திட்டத்தின்படி, அவனை இவர்களின் நகரத்திற்கு வரவழைக்க அச்சிறுமியின் மூலம் ‘ஆசை’ வார்த்தை கொடுக்கப்பட்டது. 
அய்யா, 18 மணிநேரம் இடைவிடாது வண்டி ஓட்டி வந்து சேர்ந்தார். 
எங்குமே நிறுத்தாமல் 2000 கி.மீ தூரம் பயணித்து வந்த ’மாப்பிள்ளை’, 
நேராக சிறுமி கொடுத்த பள்ளி முகவரிக்கு வந்து சேர்ந்ததும் கையும் களவுமாய் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

தந்திரமாய் பிடித்த காவல்துறை அதிகாரி கெவின் டக், அனைத்துப் பெற்றோர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்ன தெரியுமா??

”தந்தைமார்களே, தாய்மார்களே, இந்த உலகில் மனிதப்போர்வையில் விலங்குகள் அதிகம் நடமாடுகின்றன.

இண்டெர்நெட் மிகவும் அபாயகரமானது, ஆகையினால் உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் என்ன பார்க்கிறார்கள்? மற்றும் அவர்களின் ஃபேஸ்புக் தொடர்புகள் யாருடன் எவ்வாறு உள்ளது? என்பதை கவனித்து அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்தும் இருக்கிறார்.

15,300 அமெரிக்க டாலர் அபராதத்துடன், இனி கம்யூட்டர் இண்டர்நெட் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் “உள்ளே” இருக்கும் குற்றவாளியின் மறுவிசாரணை மே மாதம் 20ம் தேதி!

நமக்கு.....?
நாம் தான் பொறுப்பு!
 
நன்றி: ஜெயா டி.வி முன்னாள் செய்தி வாசிப்பாளருமான என் நண்பர் ரஃபீக் சுலைமான் ஃபேஸ்புக் பதிவு

புதன்கிழமை, 11 மே 2016 11:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh