Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வலைகளை சீரமைக்கும் பணியில் பரங்கிப்பேட்டை மீனவர்கள்

  • PDF
45 நாட்கள் தடைகாலம் காரணமாக, தற்போது மீனவர்கள் மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் பரங்கிப்பேட்டை மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
பரங்கிப்பேட்டை கடலோர பகுதி மீன கிராமங்களான அன்னங்கோவில், முடசல்ஓடை, எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு, புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கியராயன் பேட்டை, சாமியார்பேட்டை, மடவாப்பள்ளம், குமாரப்பேட்டை, அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, மாலுமியார்பேட்டை, நஞ்சலிங்கம் பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம் உள்பட 100–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பைபர் மற்றும் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இங்குள்ள மீன்கள் உள்ளூர் மட்டுமின்றி கேரளா போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் வாங்கி செல்வார்கள்.
 
இந்நிலையில் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டு தோறும் ஏப்ரல் 15–ந்தேதி முதல் மே 30–ந்தேதி வரையில் 45 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருந்து வருகிறது. இந்த காலத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். அதன்படி தற்போது இந்த தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. இதனால் இங்குள்ள மீன்பிடி தளங்களில் படகுகள் அனைத்தும் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மீனவர்கள் தங்களது வலைகளை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஒருசிலர் படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்குதல் மற்றும் அவற்றுக்கு வர்ணம் பூசுதல் ஆகிய பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
எப்போதும் பரபரப்புடன் இயங்கும் மீன்பிடி தளம் ஆட்கள் நடமாட்டமின்றி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016 13:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh