MYPNOThu03222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டை மக்களின் சில கோரிக்கைகள்

  • PDF
தமிழக சட்டமன்ற தேர்தல் – 2016; பரங்கிப்பேட்டை மக்களின் சில கோரிக்கைகள்

1. கும்மத்துப்பள்ளி முஸ்லிம் பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்துத்தல்.

2. அனைத்து அரசு பள்ள்க்க்கூடத்திலும் நவீன கழிப்பிட வசதி செய்து தருதல்.

3. பரங்கிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரையும் பெண் ஆசிரியர்களாக நியமிப்பது.

4. பரங்கிப்பேட்டை, வண்டிக்காரத்தெரு பெண்கள் பள்ளி கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது.

5. பரங்கிப்பேட்டை படித்த பட்டதாரிகள் நிறைய பேர் வேலையில்லாமல் இருப்பதால் வேலைவாய்ப்பு தளங்களை ஏற்படுத்துவது.

6. பரங்கிப்பேட்டையில் தொழிற் பயிற்சி நிலையம் (பாலிடெக்னிக்) ஏற்படுத்துவது.

7. பரங்கிப்பேட்டையில் பெண்கள் கல்லூரி அமைப்பது.

8. 24 நேரமும் செயற்படும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை. சிறப்பு மருத்துவர்களை வாரந்தோறும் ஏற்பாடு செய்வது.

9. குடும்ப அட்டை கிடைக்காத அனைவருக்கும் அவற்றை பெற்றுத் தருவது.

10. வாத்தியாப்பள்ளிக்கு தனியாக ரேஷன் கடை மற்றும் வாரந்திர சந்தை கூட ஆவனம் செய்தல்

11. பரங்கிப்பேட்டையின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் அருங்காட்சியகம் ஏற்படுத்துவது

12. பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வக்ஃப் சொத்துக்களை பாதுக்காப்பது

13. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பரங்கிப்பேட்டைய குடிசையில்லா நகரமாக மாற்றுவது.

14. பரங்கிப்பேட்டை நகரம் முழுவதம் மழை நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை அமைப்பது.

15. பரங்கிப்பேட்டையை பசுமை நகரமாக மாற்ற நகரம் முழுவதும் மரங்கள் நடுவது.

16. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு பரங்கிப்பேட்டையில் பேரிடர் மையம் அமைப்பது.

17. பூரண மதுவிலக்கு பெற்ற டாஸ்மார்க் இல்லாத நகரகமாக மாற்றுவது

18. பரங்கிப்பேட்டை அனல் மின் நிலையத்தை தடை செய்வது

19. பரங்கிப்பேட்டை மீன் பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தி, அதை பரமரிக்கும் பொறுப்பை அரசே ஏற்றுக்கொள்ளுதல்

20. பரங்கிப்பேட்டையை தமிழ்நாடு சுற்றுலாத் தளமாக அங்கீகாரம் வழ ங்குதல், சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவது. மத்திய அரசு அறிவிப்பு செய்த கலங்கரை விளக்கம் சுற்றுலா மையத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பது.

21. ஹைதர் அலி பூங்கா மற்றும் படகு குழுமம் புதிப்பித்தல் மற்றும் பராமரிப்பு

22. மழை நீர் சேமிப்பதற்க்கு வெள்ளாற்றின் குறுக்கே அனை கட்டுதல்.

23. பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலத்துக்கு மர்ஹபா ஃபஜ்லுர் ரஹ்மான் வெள்ளாற்று பாலம் என்று பெயர் சூட்ட வேண்டும்.

24. பக்கிங்ஹாம் கால்வாயை மீண்டும் போக்குவரத்திற்கு ஏற்றவாறு செப்பனிடுவது. முடியாவிட்டால் அங்கே படகுக் குழாம் ஏற்படுத்தி சுற்றுலா மையமாக மாற்றுவது.

25. ஆண்டுக்கு இருமுறை பக்கிங்காம் கால்வாயை தூர் வருதல், கழிவு நீர் கலக்காமல் த்டுத்து நிறுத்துதல். பக்கிங்காம் கால்வாய் நீர்வழிப்பாதை திட்டம் ஏற்படுத்துவது

26. பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை பழைய மாதிரியே பயணிகள் ஏற, இறங்க, முன்பதிவு செய்ய வசதி செய்வது மற்றும் பராமரிப்பது விரைவு ரயில்கள் சிலவற்றை நிறுத்தி, பயணிகள் ஏற இறங்க நடவடிக்கை எடுப்பது.

27. தொலைதூர நகரங்களுக்கு குறிப்பாக சென்னை மற்றும் திருச்சிக்கு இங்கிருந்தே பேரூந்துகள் இயக்குவது.

28. பர்மிட் இருந்தும் பரங்கிப்பேட்டைக்கு வராத பேரூந்துகளின் மீது நடவடிக்கை எடுப்பது.

29. கடலூர், சிதம்பரம் வழித்தடங்களில் செல்லும் தடம் எண் 239 பேரூந்துகளில் ஒரு சிலவற்றையாவது பரங்கிப்பேட்டை வழியாக இயக்குவது.

30. பரங்கிப்பேட்டைக்கு இரவு நேர பேருந்து வசதிகள்

31. பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தை விரிவு படுத்துதல்

32. அரசு உத்தரவை அலட்சியப்படுத்தும் தனியார் பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக நீக்குவதற்கும், பரங்கிப்பேட்டை வழித்தடத்தில் அரசு பேரூந்துகளை அதிகப்படுத்த வேண்டும்

33. பரங்கிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு பல புதிய பேரூந்து வழித்தடங்களை உருவாக்குவது.

34. பரங்கிப்பேட்டையில் ஆங்காங்கே பேரூந்து நிழற்குடைகள் அமைப்பது.

35. பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் வரை கலிமா நகர் வழியாக புதிய பேரூந்து வழித்தடம் அமைப்பது.

36. பரங்கிப்பேட்டையிலிருந்து சிதம்பரத்திற்கு கிள்ளை பொன்னத்திட்டு வழியாக நேரடி தார் சாலை.

37. விடுபட்ட வாக்காளர்கள், தெருக்கள் போன்றவற்றை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது.

38. மக்கள் தொகை கணக்கெடுப்பை தவறு ஏற்படாதவாறு (அதாவது யாரையும் விட்டுவிடாமல்) முழுமையாக எடுப்பது.

39. பரங்கிப்பேட்டையை நகராட்சியாக மாற்றுவது.

40. பரங்கிப்பேட்டையை தனியான தொகுதியாக மாற்றுவது

41. பரங்கிப்பேட்டையை தனித் தாலுக்காவாக ஆக்குவது.

42. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகம் ஏற்படுத்துவது.

43. கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். வருவாய் அலுவலகம் பரங்கிப்பேட்டைக்கு வர ஆவண செய்தல்.

இதில் சிலது கேலிக்குரியதாக இருக்கலாம். நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூட கருதப்படலாம்.

ஆனால், முடிந்தால் முடியாதது எதுவுமில்லை இன்ஷா அல்லாஹ்...

இவை பரங்கிப்பேட்டை மக்களின் சில கருத்துக்கள்தான்.... நமதூர் முன்னேற்றத்திற்கு இன்னும் இதுபோன்ற பல கோரிக்கைகள் பலரிடம் இருக்கும்.

அவை அனைத்தையும் ஒன்றாக தொகுத்து வேட்பாளர்களிடம் அளிக்க வேண்டும். யார் இவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன் முயற்சி செய்வேன் என்று வாக்குறுதி அளிக்கின்றாரோ அவருக்கு நாம் ஓட்டு போட முயற்சி செய்யலாம்.

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016 13:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh