Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

+2 தேர்வு முடிவுகள்: பரங்கிப்பேட்டை பள்ளிகளின் தேர்ச்சி விவரம்

  • PDF

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த +2 தேர்வுகளுக்கான ரிசல்ட் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 650 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 

பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் அதிகளவாக, 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவிகளில் 4,19,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.9 சதவீதம். தேர்வு எழுதிய மாணவர்களில் 3,41,931 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் இருவர் முதலிடத்தை பகிர்ந்துக்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவியும், மாணவனும் முதலிடம் பிடித்து உள்ளனர். மாணவி ஆர்த்தியும், ஜஸ்வந்தும் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 84.63% தேர்ச்சி பெற்றுள்ளனர்

 

பரங்கிப்பேட்டை பள்ளிகளின் தேர்ச்சி விவரம் வருமாறு:

 alt

பள்ளியின் பெயர்   தேர்ச்சி சதவிகிதம் முதல் மதிப்பெண்  
                     
                     
                     
                     
அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி         கவுதம் 1028 மதிப்பெண்கள்
             
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி   78%     பார்வதி 1114 மதிப்பெண்கள்
             
சேவா மந்திர் மெட்ரிக் பள்ளி   82%     சவுந்தர்யா 984
             
கலிமா மெட்ரிக் மேல்நிலை பள்ளி   87%     செய்யத் ஆஃப்ரின் சரீஃபா 1056 மதிப்பெண்கள்
             
மூனா மெட்ரிக் மேல்நிலை பள்ளி   93%     அப்துல்லா 1065 மதிப்பெண்கள்
             
சேவா மந்திர் பெண்கள்  பள்ளி   98%     ப்ரியா 1011

பரங்கிப்பேட்டை பள்ளிகளின் கடந்த 2015 வருட தேர்ச்சி விகிதத்தை பார்வையிட

http://mypno.com/index.php?option=com_content&view=article&id=8626:-2----&catid=36:mytown&Itemid=76

செவ்வாய்க்கிழமை, 17 மே 2016 14:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh