Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பிரட், பிட்சா, பர்கர் சாப்பிட்டால் புற்றுநோய் வரலாம்!!!

  • PDF

breads cancer

இந்தியாவில் இயங்கி வரும் ஐந்து பன்னாட்டு உணவகங்களான கேஎஃப்சி, டோமினோஸ், பிட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தவிர பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் நிறுவன பிரட்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில்கேஎஃப்சி உள்ளிட்ட உணவகங்களில் இருந்தும், கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரட்களில் இருந்தும் மொத்தம் 38 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 84 சதவீத பிரட்களில் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப்பொருள்கள் கலந்துள்ளன. இவை இலங்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இந்த வேதிப்பொருள்கள் கலந்த பிரட்கள் தாராளமாக கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை சாப்பிடுபவர்களுக்கு தைராய்டு பிரச்னை முதல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

 

இந்த ஆய்வு இந்தியாவில் இயங்கும்(CSE) எனப்படும் Centre for Science and Environment மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படுள்ளது. இதற்கு முன் மேலை நாடுகளிலும் பிட்சா சாப்பிடுவதால் கேன்சர் வர வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

 

ஆய்வு குறித்த முழு விவரங்கள்

http://cseindia.org/content/what%E2%80%99s-our-bread

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016 13:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # A Mohamed Arief 2016-11-17 13:07
maida mavu sappidakudathunu sonnanga. Athuku case nadanthuchu. Ipo antha case yenna anuchunu theriyale. Ipo intha vivagaram. Onnum pannamudiyathu. makkal avolothan.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh