Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கொளுத்தும் வெயில்: பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க முதல்வருக்கு MYPNO ஆசிரியர் கோரிக்கை

  • PDF

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களும் ஜூன் 1-ம் தேதி திறக்கப் படும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகளை அரசுப் பள்ளிகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், தமிழகம் மட்டு மின்றி நாட்டின் பல பகுதிகளிலும் வெயில் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் ஆந்திரம், தெலங்கானா மற்றும் வட மாநிலங்கள் சிலவற்றில் 500-க்கும் மேற்பட்டோர் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், MYPNO ஆசிரியர்களில் ஒருவரான பரங்கிப்பேட்டை கலீல் பாகவி முதலமைச்சரின் தனிப்பிரிவின் கவனத்திற்கு இது குறித்து கோரிக்கை ஒன்றினை இன்று அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கோடை விடுமுறையை  10 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்ககை வைத்துள்ளார்.

கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்து புதுச்சேரி அரசு உத்தர விட்டுள்ளது.  தமிழகத்தில் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகளின் திறப்பு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோரும், ஆசிரியர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதாவிடம் கேட்டபோது, ‘‘ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை” என தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் தரப்பிலும், ‘‘பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பது தொடர்பாக எந்த கோரிக் கையும் வரவில்லை. ஜூன் 1-ம் தேதி அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப் படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து கூறும்போது, ‘‘வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் குறைந்து விடும். பள்ளி திறப்பை தள்ளிவைத் தால் மாணவர்கள் வெயிலில் சென்று விளையாடத்தான் செய்வார்கள். அதற்கு அவர்கள் வகுப்பறையில் இருப்பதே நல்லது. மேலும் மாணவர் களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் ஏற்கெனவே பள்ளிகளில் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார், ‘‘தமிழகத்தில் வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்றார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் கூறும்போது, ‘‘சிறு குழந்தைகளின் நலன் கருதி பள்ளி திறப்பை அரசு ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும். இன்றளவும் பல கி.மீ. தூரம் நடந்து பள்ளிகளுக்கு போகும் மாணவர்கள் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் மின்விசிறி மற்றும் காற்றோட்ட வசதி கிடையாது. வகுப்பறைகளும் போதுமான அளவு இருப்பதில்லை. கழிப்பறை, குடிநீர் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

முதல்வருடன் இன்று சந்திப்பு

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் நிலவுகிறது. ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்களால் வெயிலின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாது. இதுபோன்ற நிலை 2013-ல் ஏற்பட்டபோது பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கத்தை புரிந்துகொண்டு புதுச்சேரியைப் போல் தமிழக பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும். இதுகுறித்து நாளை (இன்று) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மற்றும் அரசுச் செயலரிடம் மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை, 30 மே 2016 18:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh