Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

SSA கால்பந்து திருவிழா 2016: கோப்பையை வென்றது நெய்வேலி (படங்கள்)

  • PDF

பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியசுல்தான் சலாஹுதீன் அய்யூபி நான்காம் ஆண்டு கால்பந்தாட்டப்போட்டிகள் இன்று(29/05/2016) நிறைவடைந்தது.

இதில் சென்னை,புதுவை,கடலூர்,சத்தியபாமா,பரங்கிபேட்டை,சிதம்பரம்,காரைக்கால்,அத்திக்கடை,பூதமங்கலம், நாகூர்,பொதக்குடி,நெய்வேலி, கூத்தாநல்லூர், திண்டிவனம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் இராஜமன்னார்குடி ஆகிய ஊர்களிலிருந்து கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்றன. மூன்று நாள். சிறப்பாக நடைபெற்ற இந்த கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் இன்று(31/05/2015) மாலை நடைபெற்றது. இதில் நெய்வேலி அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.

பரிசு விபரங்கள்:

முதல் பரிசு:

சுல்தான் சலாஹுதீன் அய்யூபி கோப்பை: நெய்வேலி அணி

இரண்டாம் பரிசு:

கணித மேதை அல்கவாரிஜ்மி கோப்பை: சென்னை அணி

மூன்றாம் பரிசு:

இப்னு பதூதா கோப்பை: பரங்கிப்பேட்டை SSA Blue

நான்காம் பரிசு:

இப்னு சீனா கோப்பை: பரங்கிப்பேட்டை SSA Yellow

Fair Play Award: 

ஹம்ஜா மரைக்காயர் கோப்பை: SSA Meroon

இவை மட்டுமல்லாமல் உள்ளூர் ஜூனியர் வீரர்களுக்கான போட்டியும் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன

(சுல்தான் சலாஹுதீன் அய்யூபி கோப்பை: நெய்வேலி அணி)

 

(கணித மேதை அல்கவாரிஜ்மி கோப்பை: சென்னை அணி)

 

(இப்னு பதூதா கோப்பை: பரங்கிப்பேட்டை SSA Blue)

 கலிமா K. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் S.O.செய்யது ஆரிப் முன்னிலை வகித்தார், பேரூராட்சி தலைவர் டாக்டர் M.S. முஹம்மது யூனுஸ், பரங்கிப்பேட்டை காவல்துறை, H.M.ஹனிபா, R. முஹம்மது பாருக், ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்

 

.

 பரங்கிப்பேட்டை SSA அணியின் மேலாளர் முஹம்மது நெய்னா ஒருங்கிணைக்க, அப்துல் ரஹ்மான் தொகுக்களித்த இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நெய்வேலி அணியினருக்கு கலிமா K. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர்பரிசு தொகையையும் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி கோப்பையையும் பரிசளித்து பாராட்டினார். தொடர்ந்த்து நான்காவதுஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டி ஏற்பாடுகளை SSA அணியின் மேலாளர் முஹம்மது நெய்னா சிறப்புற செய்திருந்தார்

(இப்னு சீனா கோப்பை: பரங்கிப்பேட்டை SSA Yellow)

 

(Fair Play: ஹம்ஜா மரைக்காயர் கோப்பை: SSA Meroon)

 

 

.

 வெற்றி பெற்ற அனைவருக்கும் MYPNO சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

.

குறிப்பு: SSA கால்பந்து திருவிழாவின் பிரத்யேக புகைப்பட தொகுப்பு விரைவில் mypno வலைதளத்தில் பதியப்படும்

திங்கட்கிழமை, 30 மே 2016 20:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh