MYPNOWed03212018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

2016ஆம் ஆண்டு கல்வி பரிசளிப்பு நிகழ்ச்சி(படங்கள்)

  • PDF

அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம்வகுப்பு மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்கெளரவித்து வருகிறது. கடந்த 2000-மாவது ஆண்டில் இஸ்லாமிய கல்வி வளர்ச்சிமையம்(IEDC) என்ற அமைப்பின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு, 2002-ம் ஆண்டு முதல் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.பின்னர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்துடன் முக்கிய செயல்பாடுகளில் பங்கெடுக்கும்வெளிநாடு உள்நாடு மக்கள் சேவை அமைப்புக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கெடுத்துதொடரும் இந்நிகழ்வின் 2015-2016ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு நிகழ்ச்சிநேற்று(05-06-2016) பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி தெருவில் அமைந்துள்ளமஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் S.O.செய்யது ஆரிப் தலைமையேற்க, மௌலவி அப்துல் சமது ரஷாதி கிராஅத் என்னும் திருகுர்ஆன்வசனங்கள் ஓதி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொது செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கலிமா K. சேக் அப்துல் காதர் மரைக்காயர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் K. ராஜகோபால், ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் S. தட்சிணாமூர்த்தி, லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் M. பாலசுப்ரமணியம், ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் I.முஹம்மது இஸ்மாயில், N. முஹம்மது ஷஃபி, டாக்டர் S. நூர் முஹம்மது M.B.B.S., DSM, U. ஜமால் முஹம்மது, M. அப்துல் காதர் மரைக்காயர் உமரி, வழக்கறிஞர் செய்யது அன்சாரி, ஒய்வு பெற்ற தாசில்தார் O. முஹம்மது கவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெற்ற பரங்கிப்பேட்டை பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

பரிசு விபரங்கள்:

+2 முதல் பரிசு   : 1 ½கிராம் தங்க நாணயம் + திருக்குர்ஆன்
+2 இரண்டாம் பரிசு : 15 கிராம் வெள்ளி பதக்கம் + திருக்குர்ஆன்
+2 மூன்றாம் பரிசு : 10 கிராம் வெள்ளி பதக்கம் + திருக்குர்ஆன்
10th முதல் பரிசு : 1 கிராம் தங்க நாணயம் + திருக்குர்ஆன்
10th இரண்டாம் பரிசு : 15 கிராம் வெள்ளி பதக்கம் + திருக்குர்ஆன்
10th மூன்றாம் பரிசு : 10 கிராம் வெள்ளி பதக்கம் + திருக்குர்ஆன்

 

இவை மட்டுமல்லாமல் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பரங்கிப்பேட்டை அளவில்(வெளியூரில் படித்தவர்களையும் சேர்த்து) முதலிடம் பிடித்த ஃபரிஹா ஃபர்ஜின்(1140/1200) மற்றும் அக்ஷயா(472/500) ஆகியோருக்கு சிறப்பு கோப்பை, வெள்ளி பதக்கம் மற்றும் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.

மேலும் 10, +2 வகுப்பில் 85% க்கு மேல் எடுத்த அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதள்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், அண்ணாமலை பல்கலைகழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய முதுநிலை பேராசிரியர் Dr.செய்யது அஜ்மல்காண்,M.Sc., Ph.D., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

பரிசளிப்பு நிகழ்ச்சியாக மட்டும் அல்லாமல்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் மௌலவி S. அப்துல் காதர் மதனி, பரங்கிப்பேட்டையிலேயே படித்து தான் சார்ந்த துறை ரீதியாக ஆளுமையை வளர்த்து கொண்டு பரங்கிப்பேட்டையிலேயே தான் சார்ந்த துறையில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் Er. S.A. சாகுல் ஹமீது, கடந்த 2015டிசம்பர் மாத மழை வெள்ளத்தின் போது சிதம்பரம் சுற்றுவட்டார ஊர்களில் நிவாரணங்களை ஒருங்கிணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட டெல்லி பல்கலைகழக ஆராய்ச்சி மாணவரும் தன்னார்வ சமூக செயற்பாட்டாளருமான A.K. இனாமுல் ஹசன் ஆகியோரது சிறப்புரைகள் கல்வி குறித்த பல்வேறு புரிதல்களையும், சமுதாயம் சார்ந்த மாணவர்களின் கடமையையும் உணர்த்துவதாக இருந்தது.

நிகழ்ச்சியை L. ஹமீது மரைக்காயர் தொகுத்து வழங்கினார்.

பரிசு பெற்ற அனைவருக்கும் mypno சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

படங்கள்: தாரிக் ஜியாத், நபில்

செவ்வாய்க்கிழமை, 07 ஜூன் 2016 12:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh