Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மூனா பள்ளி வழக்கம் போல் செயல்படும்: நிர்வாகம் அறிவிப்பு

  • PDF

வரும் திங்கள் கிழமை முதல் பள்ளி வழக்கம் போல செயல்படும் என மூனா பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பரங்கிப்பேட்டை வல்லத்தம்பி மரைக்காயர் தெருவில் அமைந்துள்ள மூனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரு வருடங்களுக்கு முன்பு வீனஸ் பள்ளியிலிருந்து விலகிய மகேஷ் சுந்தர் பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

கடந்த இரு வாரமாக மகேஷ் சுந்தருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையே நிர்வாக ரீதியான பிரச்சனைகள் நிலவிவந்தது.

இந்நிலையில் மகேஷ் சுந்தர் பள்ளியிலிருந்து விலகுவதாக கடந்த 06/06/2016 அன்று மாணவர்களிடம் தெரிவித்த செய்தி  பரவியதை அடுத்து  07/06/2016 அன்று பெற்றோர்கள் மூனா பள்ளி வளாகத்தில் குவிந்தனர், ஆனால் தான் விலகபோவது இல்லை என்று அறிவித்தார்.

மீண்டும் 09/06/2016 அன்று மகேஷ் சுந்தர் அனுப்பிய ராஜினாமா மெயிலை அடுத்து நேற்று (11/06/2016) பள்ளியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மகேஷ் சுந்தர் விடுவிக்கப்பட்டார் இதனால் நேற்றும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் கூடி சலசலப்பு நிலவியது.

மகேஷ் சுந்தரின் மீது பரவலாக ஏற்பட்ட கல்வி ரீதியான நல்லெண்ணத்தின் காரணமாக வெவ்வேறு பள்ளிகளிலிருந்து தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள் தற்போது செய்வதறியாது உள்ளனர்...

அவர்களுக்கும் நிர்வாகத்திற்குமான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து சுமூக முடிவுகளுக்கு வழிவகுக்க வேண்டும், மேலும் சிறந்த நிர்வாகத்திறமையும், கல்வியறிவும் உள்ள ஒருவரை விரைவில் பள்ளி நிர்வாகம் பணியமர்த்தவேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.

நிர்வாகத்தின் அறிவிப்பு:

இந்நிலையில் "மூனா கல்வியியல் கல்லூரியின் முதல்வர், பள்ளியின் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார், விரைவில் புதிய தலைமை ஆசிரியர் பணிநியமனம் செய்யப்படுவார், மேலும் பள்ளி வரும் திங்கள் கிழமை முதல் வழக்கம் போல செயல்பட்டு வகுப்புகள் நடைபெறும்" என்றும் பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2016 13:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+2 # Yusuf 2016-06-12 17:27
Thanks for your information.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh