Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ரியாத்தில் பரங்கிப்பேட்டை சங்க இஃப்தார் விழா(ஹிஜ்ரி -1437)

  • PDF

ரியாத் 17-06-2016 : ரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கம் சார்பில் நோன்புத் துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி சகோதரத்துவ சங்கமமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

alt

உபைதுல்லா இப்னு கஜ்ஜாலி திருமறை கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

alt

சங்கத்தின் தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தனது வரவேற்புரையில் 'உண்டுக் கழித்ததும், உடுத்திக் கிழித்ததும், கொடுத்துக் களித்ததுமின்றி உன்னுடையதென்று ஏதுமில்லை' என்ற நபிமொழியை நினைவூட்டி கொடையளிப்பதன் அவசியத்தை, வாழ்வின் அநிச்சயத்தை நினைவூட்டினார்.

alt

செயலாளர் காதர்மஸ்தான் தனது அறிக்கையில் சங்கம் செய்த, செய்யவிருக்கிற நற்பணிகளைப் பட்டியலிட்டார். பொருளாளர் தமீஜுத்தீன் சங்கத்தின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

முன்னாள் நிர்வாகிகள் ஹூசைன், முபாரக் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, சிறப்பு அழைப்பாளரான பட்டுக்கோட்டை அப்துல்காதர் கமால் சிறந்ததொரு ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். மனித குல முன்னேற்றத்திற்குப் பாடுபடும் வகையில் நேரத்தை அமைத்துக்கொள்ள வேண்டுவதன் தேவையையும், அவ்வாறு செய்வதும் இறைவணக்கமே என்பதை வலியுறுத்தினார்.

alt

alt

alt

அதன் பின்னர் நோன்பு துறக்கப்பட்டு, இரண்டாம் அமர்வில் ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஷேக் முஹம்மது ஷாஜஹான் பரங்கிப்பேட்டை மக்களின் சமூகப் பணிகளை, சுனாமி முதல் அண்மைய பேரிடர் வரை அம்மக்களின் தன்னலமில்லா சகோதரத்துவ மாண்பைப் போற்றி வாழ்த்தினார்.

இறுதியாகப் பேசிய கு.நிஜாமுத்தீன் சமூகத்தில் அமைதி தழைக்கவும் முன்னேற்றம் காணவும் பாடுபடுவதே உண்மையான களப்பணி என்று கூறி தருமம் செய்வதன் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார்.

alt

ஹ.முஸ்தஃபா தொகுத்து வழங்கிய இவ்விழாவில் Z. முஹம்மது நியாஸ் நன்றி நவின்றார்.

இரவு உணவுக்குப் பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது.

சனிக்கிழமை, 18 ஜூன் 2016 17:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh