Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டை கத்தார் சங்க (Q-MAP) இஃப்தார் நிகழ்ச்சி(படங்கள்)

  • PDF

கத்தர் வாழ் பரங்கிப்பேட்டைவாசிகளுக்கான இஃப்தார் நிகழ்ச்சி 24-06-2016 வெள்ளிக்கிழமை கொழும்பு ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது. கத்தர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட முதல் ஆண்டு இஃப்தார் விருந்தில் பரங்கிப்பேட்டை மற்றும் கடலூரைச் சேர்ந்த நாற்பது சகோதரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சகோ. செய்யத்(எ) ஹாஜா மொய்தீன் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சகோ. அப்துல் ரஜ்ஜாக் கிராஅத் ஓதினார். சிறப்புரையாற்ற அழைக்கப்பட்ட திருவிதாங்கோடு சகோ. அப்துர்ரஹ்மான், நிகழ்ச்சிக்கு வருகை தந்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் சிறிது நேரத்தில் உரையாற்ற முடியாது சென்று விட்டார். தொடர்ந்து Q-MAP அமைப்பின் செயல்பாடுகள் பற்றி அமைப்பின் தலைவர் சகோ. சிராஜ் விவரித்தார். Q-MAP மற்றும் வெளிநாட்டு வாழ் பரங்கியர்களின் NRI அமைப்புகள் கல்வி,மருத்துவம், திருமணம் போன்றவற்றிற்கு உதவி செய்வதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது அவசியம் என குறிப்பிட்டார்.

 

அந்த அடிப்படையில் NRI அமைப்புகள் ஒருங்கிணைந்து பரங்கிப்பேட்டையில் சேவை மனப்பான்மையுடன் செயல்படக்கூடிய மருத்துவமனை மற்றும் value education கற்பிக்கும் கல்விக்கூடம் உருவாக்க முயற்சி செய்வது தேவை என குறிப்பிட்டார். குறிப்பாக நமதூர் பெண்கள் தாய்மை அடைந்தால் அவர்கள் சிதம்பரம், கடலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய நிலை இருப்பதை சுட்டிகாட்டி அந்த நிலை மாற பரங்கிப்பேட்டையில் மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டியதின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். பின்னர் நிதிநிலை விவரங்கள் வாசிக்கப்பட்டு செயல்பாடுகள் தொடர்ந்திட நிதி ஆதாரம் அவசியம் என்பதையும் உறுப்பினர்கள் தொடர்ந்து மாதாந்திர கூட்டத்திற்கு வருகை புரியவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நோன்பு துறந்த பின் தொடர்ந்த இரண்டாவது அமர்வில் அமைப்பு சிறப்பாக  செயலாற்றிட ஆலோசனைகள் கோரப்பட்டது. வருகை புரிந்த சகோதரர்கள் கருத்துக்களை வழங்கினர். ஐந்து பேர் கொண்ட Q-MAP நிர்வாகக் குழு 7 பேர் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ராஜா (எ)அபூபக்கர் துணைத்தலைவராகவும் அப்துல் மஜீத் இணைச் செயலாளரகவும் நியமிக்கப்பட்டனர்.

இறுதியாக சகோ அப்துல் ரஜ்ஜாக் நன்றி நவில கலந்துக் கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016 13:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh