Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி!

  • PDF

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பகுதியில் சுகாதாரமான குடிநீரை பயன்படுத்துவது குறித்து நடந்த விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி மன்ற தலைவர் எம். எஸ். முஹமது யூனுஸ் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேசிய ஊரக குடிநீர் குறித்து, விழிப்புணர்வு பேரணி பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமையில் நடந்தது. கவுன்சிலர்கள் கணேசமூர்த்தி, ஜாபர்அலி, துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன் வரவேற்றார். பரங்கிப்பேட்டை பேரூராட்சிமன்ற தலைவர் எம். எஸ். முஹமது யூனுஸ், பேரணியை தொடங்கி வைத்தார். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, சுகாதாரமான குடிநீரை பருகுவோம் என்ற கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

இந்த பேரணி பரங்கிப்பேட்டை பெரியமதகு வழியாக பஸ்நிலையம், சஞ்சீவிராயர்கோவில் தெரு, கச்சேரித்தெரு, பெரியகடைத்தெரு, தெத்துக்கடை வழியாக சென்று பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 10:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh