Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் பெருநாள் கொண்டாட்டம்(படங்கள்)

  • PDF

meerapalli 07 07

மீரப்பள்ளியில் வாயில் வரை அமர்ந்துள்ள மக்கள்

 

2016-ம்(ஹிஜ்ரி 1437) வருடத்தின் நோன்பு பெருநாள் எனப்படும் ஈகைத் திருநாள் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பிறையை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படும் இந்த பெருநாள் தமிழகத்தின் பல பகுதிகளைப் போலவே பரங்கிப்பேட்டையிலும் நேற்று(06-07-2016)ம், இன்றும் (07-07-2016) கொண்டாடப்பட்டது. நேற்று வாத்தியாப்பள்ளி நிர்வாகம் சார்பில் வாத்தியாப்பள்ளி திடலிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அலி முஹம்மது கவுஸ் திடலிலும் தொழுகை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இன்று(07-07-2016) மீராப்பள்ளியில் நடந்த பெருநாள் சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இதுதவிர லூனார் காலண்டரை அடிப்படையாக கொண்ட சிலர் 05-07-2016 அன்றும் பெருநாள் கொண்டாடியதாக அறியப்படுகிறது.

இவ்வாறு மாறுபட்ட நாட்களில் கொண்டாடப்படும் பெருநாட்களால் கடும் அவதிக்குள்ளாகி திரிசங்கு நிலையில் இருக்கும் நமது குடும்ப பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தாவது எதிர்காலத்தில் பரங்கிப்பேட்டையிலாவது ஒரே நாளில் பெருநாள் கொண்டாட நிர்வாகத்தில் இருக்கும் பெரியோர்களும், இளைஞர்களும்  விட்டுக் கொடுத்து முன்வர வேண்டும் செய்வார்களா???

mypno juniors

ஜமாஅத் தலைவருடன் இளைஞர்கள்

boys

 

வாத்தியாப்பள்ளி திடல்:

vp1

 

vathiyapalli

 

அலி கவுஸ் திடல்(தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்):

 

படங்கள் : சமூக வலைத்தளங்கள்

வெள்ளிக்கிழமை, 08 ஜூலை 2016 18:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # Thariq 2016-07-08 07:48
ஒற்றுமையா இருக்க சொல்றீங்களே! அது ரொம்ப கஷ்டம்!

அல்லாஹ் சுபஹானஹுதாலா குற்றம் பிடித்து விடுவான்..
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh