Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் கூட்டு ஃபித்ரா 2016-நேரடி விநியோகம்

  • PDF

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பைத்துல்மால் கமிட்டி ஏற்பாட்டின் பேரில் வழங்கப்படும் கூட்டு ஃபித்ரா வினியோகம் 06/07/2016 அன்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் S.O. செய்யதுஆரிப் தலைமையில் நடைபெற்றது.

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் பயனாளிகளுக்கு அவர்கள் இல்லம் நாடி சென்று நேரிடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 5 நாட்கள் சென்ற வருடம் ஃபித்ரா பெற்ற பயனாளிகளின் பட்டியல் நேரடியாக அவர்களின் இல்லம் சென்று சென்று உறுதி செய்யப்பட்டு பயனாளிகள் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.

பெருநாளுக்கு இரண்டுநாட்கள் முன்பாக ஃபித்ரா வினியோகப் பொருட்களை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய இளைஞர்கள் சுமார் 60 பேர், ஜமாஅத் நிர்வாகிகளின் அறிவுரையின் பேரில் கீழ்கண்ட பொருட்கள் அடங்கிய பேக்கஜ்களாக தயார் செய்து ஷாதி மகாலில் தயார்நிலையில் வைத்தனர்.


ஃபித்ரா பொருட்கள்:

பச்சரிசி
சீனி
கோல்ட் வின்னர் எண்ணெய்
கோதுமை ரவா
மைதா
வனஸ்பதி
பூண்டு
சேமியா
மிளகாய் தூள்
மல்லி தூள்
மஞ்சல் தூள்
மசாளா தூள்
ப.மிளகாய்
தக்காளி
வெங்காயம்
உருளை கிழங்கு
கத்தரிக்காய்
இஞ்சி
மல்லிகீரை, பொதினா
தேங்காய்
ஆட்டிறைச்சி
சேலை
புடவை
முந்திரி திராட்சை
சேமியா

இதன்படி 06/07/2016 அன்று இரவு சிறிய டிரக் போன்ற வாகனங்கள் மூலமாக ஐந்துகுழுக்களாக அனுபவம் வாய்ந்த நபர்கள் தலைமையில் இளைஞர்கள் பிரிக்கப்பட்டு ஃபித்ரா பயணாளிகளின் இல்லங்களுக்கு சென்று நேரிடையாக வழங்கப்பட்டது.


ஃபித்ரா பொருட்கள் பிரிப்பதிலிருந்து கொண்டு சென்று சேர்ப்பது வரை இளைஞர்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது பாராட்டத்தக்கது

வெள்ளிக்கிழமை, 08 ஜூலை 2016 17:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh