Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டை காவலரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி:முதல்வர் ஜெயலலிதா

  • PDF
உடல்நலக்குறைவால் உயிரிழந்த பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பஞ்சமூர்த்தி உட்பட 14 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
  • 29.12.2015 அன்று விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்த ஆவுடையப்பன்;
  • 12.3.2016 அன்று திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்த மு.சுப்பிரமணியன்;
  • 20.3.2016 அன்று காஞ்சீபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த பாபு;
  • 25.3.2016 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை 2, புனித தோமையர் மலை, ஆ-நிறுமம், 5ம் அணியில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்த குமார்;
  • 27.3.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சந்திரபாலன்; தருமபுரி மாவட்டம், தருமபுரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வரதராசு;
  • 30.3.2016 அன்று கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பஞ்சமூர்த்தி;
  • 5.4.2016 அன்று இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ஆறுமுகம்; விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சேகர்;
  • 8.4.2016 அன்று இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த ராஜகோபால்; திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ரவி;
  • 9.4.2016 அன்று சேலம் மாநகரம், செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சிவசங்கரன்;
  • 12.4.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்த ராஜேந்திரன்;
  • 17.4.2016 அன்று திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த முருகன்; 
ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017 11:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh