Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டை வழியாக ரயில் போக்குவரத்து தொடங்கக் கோரிக்கை

  • PDF
காரைக்காலில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக புதிதாக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி, பொறையாறு நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் திங்கள்கிழமை பொறையாறில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின்  மூத்த தலைவர் முகம்மது ரசீது தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலர்  ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மை பிரிவு தலைவர் தியாகராஜன் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இராம. சிதம்பரம், மாவட்டத் தலைவர் பண்ணை  சொக்கலிங்கம், மயிலாடுதுறை நகரத் தலைவர் கமலநாதன் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில், நகரத் தலைவராக சம்பந்தம், பொதுச் செயலர் - ரவிக்குமார், செயலர் - ராஜான்பாபு, துணைத் தலைவர் - ராஜேந்திரன், செம்பனார்கோயில் கூடுதல் வட்டாரத் தலைவர் - சீனிவாசன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  • தரங்கம்பாடி - மயிலாடுதுறை இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும். 
  • காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி, சீர்காழி, பரங்கிப்பேட்டை, கடலூர், புதுச்சேரி வழியாக சென்னைக்கு புதிதாக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • தரங்கம்பாடியிலிருந்து காரைக்கால் செல்லும் தேசிய நெடுஞ்சாலை குறுகலாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரங்களில் பள்ளங்கள் நிறைந்தும், வடிகால் வாய்க்கால்கள் பாலங்களில் தடுப்புச் சுவர்கள் இல்லாமலும் காணப்படுகிறது. இதனை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017 11:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh