Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடமாடும் சிகிச்சைப் பிரிவு

  • PDF
பரங்கிப்பேட்டை உட்பட மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடமாடும் சிகிச்சைப் பிரிவு மூலமாக சிகிச்சையளிக்கும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) கோ.விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
பிறந்தது முதல் 6 வயது வரையிலான மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்டந்தோறும் நடமாடும் சிகிச்சை பிரிவு செயல்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை வாகனத்தில் இயன்முறை சிகிச்சை, உதவி உபகரணக் கருவிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவினை அதிகரிக்கும் வகையிலான பொருள்கள், காதுகேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளுக்கு விளக்கப் படங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் பொருள்கள் மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கும் சாதனங்கள் மற்றும் முடநீக்கு மதிப்பீடு செய்யும் வகையில், நடமாடும் சிகிச்சை வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
ஆரம்ப கால பயிற்சி மையங்களுக்கு வர இயலாத மாற்றுத் திறனாளி குழந்தைகளின் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களை மதிப்பீடு செய்வதற்கும், பயிற்சிகள் வழங்கிடவும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
 
கடலூர் மாவட்டத்திலுள்ள 14 வட்டாரங்களுக்கும் வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடமாடும் சிகிச்சை வாகனம் ஒவ்வொரு வட்டார வள மையங்களுக்கும் சென்று சிகிச்சையளிக்கிறது. இதன்படி,
  • 26ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடலூர், 
  • 28ஆம் தேதி அண்ணாகிராமம், 
  • ஆகஸ்ட் 2ஆம் தேதி பண்ருட்டி, 
  • 4ஆம் தேதி பரங்கிப்பேட்டை, 
  • 9ஆம் தேதி குறிஞ்சிப்பாடி, 
  • 11ஆம் தேதி கீரப்பாளையம், 
  • 16ஆம் தேதி புவனகிரி, 
  • 23ஆம் தேதி சிதம்பரம், 
  • 30ஆம் தேதி குமராட்சி, 
  • செப்டம்பர் 1ஆம் தேதி கம்மாபுரம், 
  • 6ஆம் தேதி விருத்தாசலம், 
  • 8ஆம் தேதி காட்டுமன்னார்கோவில், 
  • 15ஆம் தேதி நல்லூர், 
  • 20ஆம் தேதி மங்களூர் வட்டார வள மையம் 
ஆகிய இடங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
 
எனவே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறையுடைய, பார்வை குறைவுடைய, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளை நேரில் அழைத்துவந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017 11:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh