Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பவர் பிளாண்ட் தொழிலாளி பலி!

  • PDF

power plant

 

பரங்கிப்பேட்டை:  கரிக்குப்பம் அருகே ஐஎல்எப்எஸ் என்ற பெயரில் தனியார் அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இந்த கம்பெனியில் பணிபுரிபவர்கள் பரங்கிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் தங்கியுள்ளனர். புதுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் தங்கியிருந்த தொழிலாளி ஒருவர் நேற்று(26-07-2016) மின்சாரம் தாக்கி பலியானர்.

பீகார் மாநிலத்தில் உள்ள ப்ருகால் பகுதியைச் சேர்ந்த அமேக்குமார் மேத்தா என்னும் 22 வயதுடைய தொழிலாளி அவரது துணிகளை துவைத்து அங்கிருந்த இரும்பு கம்பியில் காயவைக்கும் போது மின்சாரம் தாக்கி அங்கேயே பலியானதாக காவல்துறை தரப்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

வட மாநில தொழிலாளர்கள் அதிகமானோர் பணி புரியும் இந்த பவர் பிளாண்ட்ல் உற்பத்தி துவங்கும் முன்பே அடிக்கடி விபத்து நடந்து பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்காகும்.

புதன்கிழமை, 27 ஜூலை 2016 18:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh