Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி உதவித் தொகை சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • PDF
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயில்பவர்கள் ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதர படிப்புகளான டிப்ளமோ, ஐடிஐ, பட்டப் படிப்புகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் மொத்தம் 18,989 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை பெறுவதற்கு  இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.

தேவையான சான்றுகளுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை படியெடுத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். கல்வி உதவித் தொகையானது வங்கிகள் மூலமாக வழங்கப்படுவதால் வங்கி எண், வங்கி குறியீடு எண் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment


Security code
Refresh