Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் ”பொற்காலம் திரும்பட்டும்”(படங்கள்)

  • PDF

cmn saleemந்திய விடுதலைக்காக ஆங்கிலேயனின் மொழியான ஆங்கிலத்தை கற்பது ஹராம் என்னும் ஃபத்வா-வினாலும், கல்வியில் பின் தங்கிய முஸ்லிம் சமூகத்தின் இன்றைய இளைய தலைமுறை தமிழகத்தில் இந்த இருபதாண்டுகளில் கல்வியில் சற்று முன்னேற்றமடைந்துள்ளது. சில கல்வி நிறுவனங்களை தவிர்த்து கல்வியை காசு சம்பாதிக்க மட்டுமே கற்றுக் கொடுக்கும் பள்ளிகளும்,கல்லூரிகளும் பெருத்து கிடக்கும் இந்த நாட்டில் தீவிர வலதுசாரி மோடி அரசாங்கம் கல்வியை காவி மயமாக்கிட துடிக்கும் சூழ்நிலையில், சமூகத்தில் சிந்தனை வித்துக்களை விதைத்து அறிவார்ந்த சமுதாயமாக மாற்றிட உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்  CMN சலீம் கலந்துக் கொண்ட ”பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி, ஜெய்னுலாபுதீன்&ஹமீத் மரைக்காயர் மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் இன்று(28-08-2016) பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில் நடைபெற்றது.audience saleem

 hiqma

உலக மற்றும் மார்க்க கல்விகளை தனித்தனியாக பயிற்றுவிக்கப்படும் நிலையை மாற்றி, இஸ்லாமிய மார்க்க கல்வியுடன் இணைந்த அரசின் பாடத்திட்டங்களை கற்பிக்கும் கொண்ட இஸ்லாமிய நர்சரி & பிரைமரி பள்ளிக் கூடங்கள் உருவாகி அதன்  மூலம் சமுதாயம் கற்று பயனடைய வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பயிலரங்குகளை நடத்தி இருக்கிறார் CMN சலீம். அதன் அடுத்த கட்டமாக சமுதாய பெண்களின் கல்வி அறிவை முன்னேற்றும் நோக்கத்தில் இஸ்லாமிய பாடத்திட்டங்கள் இணைக்கப்பட்ட அன்னை கதீஜாமகளிர் கல்லூரி புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தில் இவர்களின் வழிகாட்டுதலுடன் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்னும் சில மகளிர் கல்லூரிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன.

 

baitul hiqmaa

இதன் தொடர்ச்சியாக முற்றிலும் புதிய கோணத்தில் பாரம்பர்ய கருத்தியலில் ஆண்களுக்கான கல்விநிலையத்தை உருவாக்கும் முயற்சியாக பொற்காலம் திரும்பட்டும்” என்ற முழக்கத்துடன் சமுதாய சட்ட சிக்கலுக்கு தீர்வு தரும் விதமாக சட்டக் கல்லூரி உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இது வெறும் சட்டக்கல்லூரியாக இல்லாமல் மார்க்க கல்வியும் பயிற்றுவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரபி பல்கலைகழகத்துடன் இணைந்த சட்டக் கல்லூரி, இந்திய ஆட்சிப் பணி கல்லூரி, ஊடக கல்லூரி, வர்த்தக கல்லூரி உள்ளிட்ட ஒருங்கிணைந்த உயர் கல்வி நிறுவனம் பைத்துல் ஹிக்மான்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விளக்க நிகழ்ச்சியே இன்று(28-08-2016) ஷாதி மஹாலில் நடந்தேறியது.

 

பரங்கிப்பேட்டை பெற்றோர்களில் பலரும் தத்தமது பிள்ளைகளைஇஞ்சினீயர்ஆக்குவதையே கனவாக வைத்திருக்கின்றனர். காலத்தின் தேவைக்கேற்ப படிப்பை மாற்றி உலகளாவிய சமுதாயத்தோடு போட்டி போட அந்த பழையஇஞ்சினீயர்கனவை கலைத்து விட்டு சமுதாயத்தின்பொற்காலம் திரும்பபரங்கிப்பேட்டையின் இளைய தலைமுறையும், பெற்றோர்களும் தயாராகட்டும்

baaitul hiqma

 

புகைப்படங்கள் : சமூக வலைத்தளங்கள்&mypno

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016 12:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh