Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

விசாரணை கைதிகள் விடுதலை - தமிழக அரசு முடிவு...?!

  • PDF

தமிழக சிறைகளில் சுமார் 50 முஸ்லிம் சிறைவாசிகள் 16 ஆண்டுகள் முதல் 19 ஆண்டுகள் வரை சிறையில் இருந்து வருகிறார்கள். சாதாரணமாக ஒரு ஆயுள் தண்டனை கைதி 13 ஆண்டுகள் கழித்தவுடன் சிறை முறைப்படி மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், சிறை கண்காணிப்பாளர், மற்றும் நன்னடத்தை அதிகாரி ஆகியோரை கொண்ட அறிவுரைக் கழகம் (Advisory Board) கைதியின் மனுவை பரிசீலனை செய்து 14 வருடத்தில் அவரை விடுதலை செய்வார்கள்.

ஆனால், முஸ்லிம் சிறைவாசிகள் அனைவருமே 15 வருடத்திற்கு மேல் சிறையில் கழித்திருந்த போதும் கூட அவர்களுக்காக அறிவுரைக் கழகம் (Advisory Board) கூட்டப்படவே இல்லை. மற்றொரு முறையில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யபடுகிறார்கள். அரசியல்சாசனமே நம் நாட்டில் உயர்ந்தது, அந்த அரசியல் சாசனம் பிரிவு 161 ன்படி மாநில கேபினெட் அமைச்சர்கள் குழு ஆயுள் கைதிகள் அல்லது தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்வதாக முடிவுசெய்து அதனை மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்தால் அதனை ஏற்று அவர் பரிந்துரைக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிடுவார், இது அரசியல் சாசனம் மாநில ஆளுநருக்கு வழங்கியுள்ள உரிமை என்பதால் இதில் சுப்ரீம் கோர்ட் கூட தலையிட முடியாது.

நம் நாட்டின் சிறைச்சாலைகளில், விகிதாச்சார அடிப்படையில் அதிகமாக இருப்பது முஸ்லிம்கள் மட்டுமே என்ற ஒரு அறிக்கையை நீதிபதி சச்சார் கமிட்டி இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் வெளியிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கண்ட அதே நிலை தொடருவதை மனித உரிமை ஆர்வலர்கள் உறுதிபடுத்துகிறார்கள். 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் மீதும் கருணை காட்டப்படுமா என்ற கேள்வி பல ஆண்டுகளாக தொக்கி நிற்கிறது ..

இந்நிலையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளரும், mypno.com இணையதள ஆசிரியருமான பரங்கிப்பேட்டை கலீல் பாகவி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (CM cell) கடந்த 19/06/2016 அன்று சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

இம்மனுவிற்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் மாற்று சிறைத்துறை தலைவர் அலுவலகம் கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளது:

ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் நேர்வு தற்சமயம் அரசின் பரீசலனையில் இல்லை. மேலும் 14 ஆண்டுகள் தண்டனை முடித்த சிறைவாசிகளுக்கு அறிவுரைக்கழகம் கூட்டப்பட்டு அதன் பரிந்துரையின் பேரில் முன் விடுதலைக் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

முழு பதிலின் நகல் :

விசாரணை கைதிகளாகவே தங்கள் இளமையை தொலைத்து சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளின் குடும்பங்களின் கண்ணீரை துடைக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அரசு இது குறித்து நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவோம்.

புதன்கிழமை, 14 செப்டம்பர் 2016 21:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+1 # Samsudeen 2016-09-15 10:12
தற்போது 19 ஆண்டுகளாகச சிறையில் இருக்கும் முஸ்லிம்ககள் ஆயுள் தண்டனை சிறைவாசிகளாகவே உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகளுக்கான அரசின் விடுதலை இம் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு அரசாணை 1762/87 ன் பட தகுதி இருந்தும் தொடர்ந்து முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலை மறுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு மறுக்கப்பட்டது.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh