MYPNOWed03212018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பருவ மழை வரும் முன்னே...

  • PDF

kulam meerapalli1பரங்கிப்பேட்டையில் உள்ள நீர்நிலைகள் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியும், பராமரிப்பு இன்றி சீரழிந்தும் வருவது கண்கூடு. பள்ளிவாசல்கள் / கோயில்கள் அல்லாத குளங்கள் குட்டைகள் போன்ற நீர்நிலைகள் மனித பேராசைக்கு பலியாகி, மூடப்பட்டு அதன் மேல் கட்டிடங்கள் உருவாவதை  பரிதவிப்புடன் கைகளை பிசைந்துக்கொண்டு காணும் பரிதாப தலைமுறையாக நாம் உள்ளோம். வீட்டுக்கு ஒரு கிணறும், பள்ளிகளின் அடையாளமாக குடிநீர் கிணறுகளும் திகழ்ந்த காலங்கள் போயே போய் விட்டன. கூகுள் மேப்பில் தேடிப்பார்த்தால் பெரிய ம(தகு)துவுக்கு அருகில் ஒரு மிகப்பெரிய நீர்நிலை காணப்படுகிறது. மற்றபடி திட்டுத்திட்டாக ஆங்காங்கே சில நீர்நிலைகள் மட்டுமே ஆறுதலாக கண்ணுக்கு தெரிகின்றன

kulam meeraplli2மீராப்பள்ளி, கிளுர் நபி பள்ளி, வாத்தியாப்பள்ளி, புதுப்பள்ளி, அப்பாபள்ளிமஃதூம் அப்பா(பக்கீம்ஜாத்) பள்ளி, கவுஸ்பள்ளி, காதரியா பள்ளிஆகிய பள்ளிகள் குளங்களுடன் கூடிய பள்ளிகளாக உள்ளன.வாத்தியாப்பள்ளி போன்ற சில பள்ளிவாயில்கள் தங்கள் பள்ளி குளங்களை அழகாக சீர் செய்து அதை கொண்டு அருகில் தோட்டங்கள் உருவாக்கி பாசன வசதிகள் செயது முறையாக திட்டமிட்டு வருகின்றன.கிளுர் நபி பள்ளிவாசல் குளமும் இதற்கு மிக சிறந்த உதாரணமாக திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் மஃதூம் அப்பா பள்ளி வாசல் குளம் தூர்வாரப்பட்டது ஒரு முன்னுதாரண ஆறுதல் நிகழ்வு

இதில் பசுமைpno போன்ற அமைப்புக்களும் ஆர்வம் காட்டிவருவது நல்ல விஷயமாகும்.

குளங்கள் மற்றும் நீர்நிலைகள் பராமரிப்பில் முன்னுதாரணமாக திகழும் சில பள்ளிவாயில்களில் நமதூர் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி முதன்மையானதாகும். ஊரின் மத்தியில் இருந்தாலும் முறையான சுற்றுச்சுவர் எழுப்பி  பாதுகாப்புடன் நெடுங்காலமாக மீராப்பள்ளி நிர்வாகம் குளத்தை பராமரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை உள்ளிட்ட காரணங்களால் பள்ளியின் கிழக்கு புற சுற்று சுவர் சரிந்து விழுந்தது. தற்போது அதனை பெரிய பாறாங்கற்களுடன் கூடிய சிமிண்ட் கலவை கொண்டு புதியதாக சீர் செய்யப்பட்டு வருகிறது. மழை காலங்களில் எப்போதும் வழிந்து ஓடும் மேற்கு புற சுவரும் தற்போது முன்னெச்சரிக்கையாக இடித்து விட்டு புதிதாக கட்டப்படுகிறது. எதிர்வரும் மழை காலத்தை கவனத்தில் கொண்டு இந்த பணி துவங்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.pakkimjath

நீர்நிலைகளை பாதுகாக்கும் இவ்விஷயத்தில் மீராப்பள்ளி போன்று மற்ற பள்ளிகளும் முன்வரவேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அவா. மேலும் எதிர்வரும் மழைக்காலத்தை கணக்கில் கொண்டு குளங்களை தூர்வாருதல், குளக்கரைகளை பலப்படுத்துதல், வடிகால்களை சீர்செய்தல், இயன்றால் ஒவ்வொரு குளங்களுக்கு இடையில் வடிகால் இணைப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற அத்தியாவசிய பணிகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, நிலையான நல்லறத்தை (சதக்கத்துள் ஜாரியா) சேர்ந்த ஒரு மகத்தான விஷயம். மேலும் மழைக் காலம் வரும் முன்பே பரங்கிப்பேட்டையின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலைகளை கருத்திற்கொண்டு தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகத்தில் இருப்பவர்கள் இப்போதே தொடங்கிட வேண்டும்.

நெருங்கி வரும் நெருக்கடியான காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகள் இருப்பியல் நலன்களை கருத்தில் கொண்டு இது போன்ற பாராட்டத்தக்க காரியங்களை முன்னெடுக்கும் மீராப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளி நிர்வாகங்கள், அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களுக்கு mypno சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  

தொடர்புடைய செய்திகள்

பசுமைப் புரட்சியை எதிர்நோக்கி கவுஸ்பள்ளி!

பள்ளிவாசலில் ஒரு பசுமைப் புரட்சி!

பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2016 21:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh