Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

தொடங்கியது வடகிழக்கு பருவமழை...! மழை தொடரும்

  • PDF

சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், பரங்கிப்பேட்டை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.இதே போன்று சென்னை பட்டினப்பாக்கம், அடையாறு, எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட இடங்களில் இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.  இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.

திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனிடையே டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இயல்பாக 44 செ.மீ வரை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பு நிலை அதாவது 39 செ.மீ முதல் 44 செ.மீ வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வட மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2016 12:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh