
பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது, இந்த விலை உயர்வு இன்று (நள்ளிரவு) முதல் அமலுக்கு வருகிறது.
இந்த விலை உயர்வின்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.13 என்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.02 என்றும் விற்கப்படும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றங்கள் மற்றும் சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய அம்சங்கள் பெட்ரோல் விலைகளை தீர்மானிப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.