Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மத்திய தகவல் ஆணையத்திடம் முறையிட புதிய வசதி

  • PDF
வரும் திங்கள் கிழமை (7-ம் தேதி) மத்திய தகவல் ஆணையத்தின் 2 நாள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்க உள்ளார். அப்போது, மின்னணு நீதிமன்ற (இ-கோர்ட்) கட்டமைப்பு முறை ஒன்றையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இப்புதிய கட்டமைப்பின் மூலம், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தி வழக்குகள் மற்றும் புகார்களை விரைந்து தீர்த்துவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இணைய தளம் மூலமாகவே, ஆன்லைனில் புகார்களையும் வழக்குகளையும் பதிவு செய்ய வசதி செய்யப்படும்.

புகார்கள் பதிவான பிறகு, அவை மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், ஒவ்வொரு நிலையிலும் உடனுக்குடன் மனு தாரருக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். தங்களுக்கு வழங்கப் பட்ட பதிவு எண் மூலமாகவும், மனுதாரர்கள் நிலவரத்தை உடன டியாக தெரிந்துகொள்ள வசதி செய்யப்படும்.

Add comment


Security code
Refresh