Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வங்கிகளில் அலைமோதும் மக்கள், வெறிச்சோடிய வாரசந்தை...!

  • PDF

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கடந்த 08/11/2016 நள்ளிரவு முதல் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் என்று கடந்த 08/11/2016 அன்று இரவு பிரதமர் மோடி அறிவித்தார்.... இது நாடு முழுதும் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது...

நேற்றைய தினம் வங்கிகள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து இன்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், கணக்கில் வரவு வைக்கவும் இந்தியா முழுதும் வங்கிகளில் காலைமுதலே கூட்டம் அலைமோதுகிறது.

பரங்கிப்பேட்டையின் பிரதான வங்கிகளான இந்தியன், இந்தியன் ஓவர்சீஸ், ஐசிஐசிஐ வங்கிகளில் வங்கி திறப்பதற்கு முன்பிருந்தே கூட்டம் வாசல்வரை இருந்தது. தற்போதைய நிலவரப்படி நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் வங்கியின் முன் காத்திருக்கின்றனர்.
 
கணக்கில் வரவு வைக்க (டெபாசிட் செய்ய) எந்த விதிமுறைகளும் இல்லை, எப்போதும் போல செபாசிட் படிவத்தை (challaan) பூர்த்தி செய்து கொடுத்தால் போதுமானது.... அதே போல கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் எப்போதும் போல withdrawl slip அல்லது செக் கொடுத்து 4000 வரை பெற்றுக்கொள்ளலாம்..

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற RBIயின் புதிய Annexure 5 படிவத்தை பூர்த்தி செய்து அடையாள அட்டை காண்பித்து ஒரு நபர் 4000 வரை மாற்றிக்கொள்ளலாம்.

பரங்கிப்பேட்டையின் எந்த வங்கியிலும் தற்போது வரை புது ரூபாய் நோட்டுக்கள் தரப்படவில்லை 20,50,100 களில் மட்டுமே பணம் தரப்படுகிறது.

 

கூட்டத்தின் காரணமாக பிரதான சாலையான சஞ்சீவிராயர் கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமையான இன்று வழக்கத்திற்கு மாறாக வார சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. பெரும்பாலும் வியாபாரிகள் 500,1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வரும் சனி, ஞாயிறுகளிலும் வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓரளவு நிலைமை கட்டுக்குள் வரலாம்.

திட்டத்தின் பயன்கள், எந்த அளவு இதனால் கள்ளப்பணம் ஒழியும், பெருமளவில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் இதனால் பாதிப்படையபோவதில்லை போன்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க,  குறைந்த இடைவெளியில் அவசரமாக வந்த அறிவிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை.

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2016 17:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh