Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கலிமா பள்ளியில் பாரம்பரிய உணவு முறை மற்றும் மூலிகைகள் கருத்தரங்கம்

  • PDF

நமது உடல்நிலை மற்றும் சுற்று சூழலை பாதுகாக்க மரபு சார்ந்த வாழ்க்கை முறைக்கு நம்மை மாற்றிக்கொள்வதே  வழி என்ற கருத்தாக்கம் வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில் பரங்கிப்பேட்டையிலேயே முதன் முறையாக பாரம்பரிய உணவு முறை மற்றும் மூலிகைகள் பற்றிய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி  கலிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12.11.2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

மறைந்த ஜனாப். கலிமா K . ஹமீது கவுஸ் மரைக்காயர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலிமா K . ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆய்வு மையத்தின் புல முதல்வர் முனைவர்  க. கதிரேசன் அவர்களின் உரை சுவாரசியமாக இருந்தது.  மதிய நிகழ்வாக பெண்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டும் கலந்துக்கொண்ட மூலிகை கண்காட்சி நடைபெற்றது. அதில் மாணவ மாணவியர்கள் மூலிகையின் முக்கியத்துவம் சிறு குறு தானியங்கள் பற்றியும் எளிமையாக விளக்கினார்கள்.

உடல்நலக்குறைவுகளுக்கு மூலிகை வைத்தியங்கள் பற்றியும் விளக்கப்பட்டது. இயற்கையான, ரசாயனங்கள் அற்ற ஆர்கானிக்  உணவு முறைகளின் நன்மை பற்றியும் விளக்கி அந்த விளைபொருட்கள் சாப்பிடவும் அளித்தனர். கேரட் ஹல்வா என்று சுவையும் நன்றாக இருந்தது. மரத்த்த்தால் செய்த பொருட்களை விற்பனைக்கும் வைத்ததிருந்தனர். மக்களும் வாங்கி பயனடைந்தனர். நீரிழவு மற்றும் இதய நோய்களுக்கான இயற்கை தீர்வுகளை மூலிகைகளின் வடிவில் மாணவ மாணவிகள் அளித்தது நிறைவாக இருந்தது.

நோய்கள் பெருகி, மருந்துகளே வாழ்க்கையாக ஆகிவரும் இந்த நெருக்கடியான சூழலில் பாரம்பரிய இயற்கை உணவு மற்றும் வாழ்க்கைமுறையின் மீது வெளிச்சத்தை பாய்ச்சும் இது போன்ற நிகழ்வுகள் பரங்கிப்பேட்டை மாநகருக்கு புதுமையான நல்வரவு. முன்னோடியாக நின்று அதை சிறப்பாக முன்னெடுத்த கலிமா அறக்கட்டளையின் கலிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2016 19:33 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh