Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

சாமியார்பேட்டை கடலில் தொடரும் மரணங்கள்

  • PDF

beach1பரங்கிப்பேட்டையை அடுத்த சாமியார்பேட்டை கடலில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் பலியாகி உள்ளனர்

மாறி வரும் கலாச்சாராத்திற்கேற்ப நகரங்களை போல பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் “வீக் என்(d)ட்” எனப்படும் வார விடுமுறை நாட்களில் கடற்கரை போன்ற இடங்களில் மக்கள் கூடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பரங்கிப்பேட்டை மட்டுமின்றி சுற்று வட்டாரப்பகுதிகளில் இருப்பவர்களும் புதுப்பேட்டை மற்றும் சாமியார்பேட்டை கடற்கரை பகுதிகளுக்கு வருகின்றனர்.

கடந்த(06-11-2016) சாமியார்பேட்டை கடலில் குளிக்க வந்த காட்டுமன்னார்குடி தாலுக்காவை சேர்ந்த நங்குடிகுப்பம் என்னும் ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாபு என்பவர் தனது நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கடல் அலையில் சிக்கி பலியானார்.இவர் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஐ.டி.ஐ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் அக்ரீ எனப்படும் விவசாய படிப்பு படித்து வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த அழகுராஜா என்ற மாணவர் நேற்று(1611-2016) சாமியார்பேட்டை கடலில் குளித்தபோது கடல் அலையில் சிக்கி பலியாகியுள்ளார்.இவருடன் கல்லூரி ஆசிரியர் மற்றும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலாவாக இங்கு வந்திருந்தனர்.

இது மட்டுமின்றி கடந்த வருடங்களிலும் ஐந்திற்கும் மேற்பட்டோர் குறிப்பாக மாணவர்கள் இங்கு குளித்த போது பலியாகி இருக்கிறார்கள். பொழுதை போக்க சாமியார்பேட்டை கடற்கரை பகுதிக்கு வந்து செல்லும் மக்களின் உயிரை பறிக்கும் கடற்கரையாக மாறி வருவதைக் கண்டு அச்சத்தில் இருக்கும் மக்களின் பயத்தை போக்கி பாதுகாப்பாக குளிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உடனே செய்ய முன் வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

beach2

 

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2016 18:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh