Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் மானுடம் காப்போம் கருத்தரங்கம்…!

  • PDF

communist3மத்திய அரசின் மதவெறி நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும், முஸ்லிம் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் பரங்கிப்பேட்டை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்பாட்டில் இன்று(22-11-2016)மாலை சந்தைகடைத்தோப்பு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2001-ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது நடைபெற்ற கலவரத்தில் சங்பரிவார கூட்டம் நடத்திய கொலைவெறி தாக்குதல்கள் மற்றும் போலி என்கவுண்டர்களை வெளியுலகத்துக்கு சொன்ன ”ரானா அயூப்” எழுதிய Gujarat Files நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை அறிமுகப்படுத்தி மாநிலக்குழு உறுப்பினர் மூசா உரையாற்றினார் குஜராத் கோப்புகள் எனப்பெயரிடப்பட்ட இந்நூலை ச.வீரமணி தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார். 

பொதுசிவில் சட்டம் என்றால் என்ன என்பது குறித்து மா.கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் உரையாற்றினார். மனித உரிமை செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான பேரா.மார்க்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு தமிழகம் முழுவதும் பொய் வழக்குகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும் அவர்களுக்கான ஜாமீன் மறுக்கப்படுவதையும் விளக்கி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி  பேசினார்.

communist1

communist2

பரங்கிப்பேட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் முஹம்மது யுனூஸ், ஐக்கிய ஜமாஅத் தலைவர் செய்யத் ஆரிஃப் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் உட்பட திரளானோர் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

 

 

 

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2016 18:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh