Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் ஷரீஅத் பாதுகாப்பு மாநாடு

  • PDF
jaamthul ulema3
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய ஷரீஅத் சட்ட விளக்க பாதுகாப்பு மாநாடு பரங்கிப்பேட்டையில் நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஞாயிறு (நவம்பர் 27) பகல் 2:30 மணி முதல் சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா எம். அப்துல் காதர் மரைக்காயர் உமரி தலைமையில் நடைபெற்றது.
 
கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், பரங்கிபேட்டை அனைத்து மஸ்ஜிதுகளின் முத்தவல்லிகள், ஜமாஅத்துல் உலமா சபையினர், சமுதாய இயக்க பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். தவ்லத்துன் நிஸா பெண்கள் மதரஸா பேராசிரியர் ஏ. முஹம்மது யூஸுஃப் காஷிஃபி கிராஅத் ஓதினார். சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் எம். முஹம்மது ஷிப்லி ரஹ்மானி வரவேற்புரையாற்றினார்.
 
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் எஸ். அப்துல் ரஜ்ஜாக் உலவி வாழ்த்துரை வழங்கினார். கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா ஏ. சபியுல்லாஹ் மன்பஈ, ஜமாஅத்துல் உலமா நிர்வாகியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான மௌலானா தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, சிதம்பரம் மௌலானா எம்.ஒய். முஹம்மது இஸ்மாயில் நாஜி ஆகியோர் துவக்க உரையாற்றினர்.jaamthul ulema1
 
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அரசின் கொள்கை முடிவுகளும், மார்க்க அறிஞர்களின் நிலைகளும் என் தலைப்பிலும், கே.எம். மீரான் முஹ்யித்தின் ரஷாதி தலாக்கின் எச்சரிக்கையும், முத்தலாக் நிகழுதலும் என்ற தலைப்பிலும், கோவை கரும்பு கடை பள்ளிவாசல் தலைமை இமாம் ஏ. அப்துல் அஜீஸ் பாகவி சமநீதியும், ஷரீஅத் சட்டங்களும் என்ற தலைப்பிலும் விளக்கமான முறையில் சிறப்புரையாற்றினர். 
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் (முன்னாள் எம்.பி) பொதுசிவில் சாத்தியமும், அனைத்து சமய மக்களின் பாதிப்புகளும் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார்.
jaamthul ulema2
 
பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளருமான மௌலானா ஏ. லியாகத் அலி மன்பஈ மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாநில ஜமாஅத்துல் உலமா சபை செயற்குழு உறுப்பினரும், பரங்கிப்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளருமான மௌலானா எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் எம்.எஸ். காஜா மொய்னுதீன் மிஸ்பாஹி நன்றியுரையாற்றினார்.
 
கடலூர் மாவட்டம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பித்தனர். பெண்களுக்கு ரஹ்மான்ஸ் திருமண மண்டபத்தில் காணொளி வசதியுடன் தனியிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. MYPNO இணையதளம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. திரளான மக்கள் கலந்து கொண்டனர். துஆவுன் நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவடைந்தன.jaamthul ulema3 theermanam
 

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017 11:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh