Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் வசூல்

  • PDF

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், வரும் 15-ம் தேதி வரையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரூ.500, 1000 நோட்டுகள் இனி செல்லாது என கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, மக்களிடம் பணப் புழக்கம் குறைவு, சில்லறை தட்டுப் பாடு ஏற்பட்டதால் நாடுமுழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக் கப்பட்டது. வங்கிகளில் போதுமான பணம் கிடைக்காமல், மக்கள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.

இதற்கிடையே, ஏற்கெனவே அறிவித்தப்படி டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர் பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படும். பழைய 500, 1000 நோட்டுகள் டிசம்பர் 15-ம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதுதவிர, சுங்கச்சாவடிகளில் எஸ்பிஐ போன்ற வங்கிகளின் ஸ்வைப் கருவிகள் மூலமும் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

பழைய 500, 1000 நோட்டுகள் டிசம்பர் 15-ம் தேதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும். இதுதவிர, சுங்கச்சாவடிகளிலும் எஸ்பிஐ போன்ற வங்கிகளின் ஸ்வைப் கருவிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும்.

Add comment


Security code
Refresh