Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் வங்கி முன்பு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

  • PDF
 
பரங்கிப்பேட்டையில் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வங்கி முன்பு பொதுமக்கள் திடீரெ ன சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
500, 1,000 ருபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எழுந்த பிரச்சினை இதுவரையில் சீராகவில்லை. வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வருகிறார்கள். தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் முதியோர் உதவி தொகை, ஓய்வூதியம் போன்றவைகளும் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் பணத்தை எடுப்பதற்கும், டெபாசிட் செய்வதற்கும் என்று வங்கிகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.
 
இந்நிலையில் பரங்கிப்பேட்டையில் சஞ்சிவீராயர் கோவில் தெருவில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் நேற்று காலை வங்கி திறப்பதற்கு முன்பாகவே பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். கூட்டம் அதிகமானதால் பரங்கிப்பேட்டை போலீசார் அவர்களை ஒழுங்கு படுத்தினர்.
 
இந்த நிலையில் வங்கியில் பொதுமக்களுக்கு பணத்தை கொடுக்கவும், டெபாசிட் தொகை பெறும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு, வங்கியின் முன்பக்க கதவை வங்கி அதிகாரிகள் பூட்டினர். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து அங்கிருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் சரியான முறையில் பணம் வழங்க ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017 11:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh