Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

காயிதேமில்லத் விருது பெறுகிறார் நஜீர் உபைதுல்லாஹ்!

  • PDF

பரங்கிப்பேட்டை: இலக்கியம், பண்பாடு, மதநல்லிணக்கம், மனிதநேயம், சமுதாய மேம்பாட்டிற்காக புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு தலைப்பின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 25-வது ஆண்டு வெள்ளி விழாவாக நடபைபெற உள்ள இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 17-ம் தேதி புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.  இந்த விழாவில் விருதுகளை புதுவை மாநில முதல்வர் வே. நாரயணசாமி வழங்குகிறார்.

 இதில் அறக்கட்டளை சேவைக்காக கண்ணியமிகு காயிதே மில்லத் விருதிற்காக பரங்கிப்பேட்டை உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளை நிறுவனர் நஜீர் உபைதுல்லாஹ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பையும் அழைப்பையும் புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ஷேக் உசேன் மற்றும் நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு வருகை தந்து கொடுத்தார்கள்.

1990ம் ஆண்டு தனது தந்தை பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதன் சார்பாக பரங்கிப்பேட்டையில் முதன் முதலாக வாத்தியாப் பள்ளி தெருவில் பயணியர் நிழற்குடை அமைத்தது மட்டுமின்றி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்து ஏழை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாணவ - மாணவிகளின் கல்விக்கு உதவி வருவது மற்றும் சமுதாய-சமூக நலப் பணிகளுக்காக உதவி செய்வதற்காக இவருக்கு இந்த விருதை வழங்க உள்ளனர்.

அப்போது உடனிருந்த  கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரும் முன்னாள் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் , பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எஸ்.ஓ. செய்யது ஆரிப், கலிமா ஷேக் அப்துல் காதர் ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதிற்காக உபைதுல்லா டிரஸ்ட் நிறுவனர் நஜீர் உபைதுல்லாஹ் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016 12:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh