Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ஆட்டோக்களை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

  • PDF
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்துக்குள் ஆட்டோக்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
 
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர பரங்கிப்பேட்டையை சுற்றி 100–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் அனைவரும் சிதம்பரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்கு வந்து தான் பஸ் ஏறிச்செல்ல வேண்டும். இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் ஏராளமானோர் தினமும் இந்த பஸ்நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
 
இதன் எதிரே நீதிமன்றம், போலீஸ் நிலையம் மற்றும் கிளை சிறைச்சாலை போன்றவை அமைந்துள்ளதால் பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் சிலர் 50–க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பஸ் நிலையத்துக்குள் இடையூறாக நிறுத்தியுள்ளனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும், மாணவ–மாணவிகளும் பலவித இடையூறுகளுக்கு மத்தியில் பஸ் ஏறிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
மேலும் சிலர் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதால் பஸ் நிலையத்திற்கு வருகிற பெண்கள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதன் அருகில் போலீஸ் நிலையம் இருந்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக பஸ் நிலையத்துக்குள் ஆட்டோக்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அத்துடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரி ஆகியோருக்கும் கோரிக்கையை அனுப்பப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017 11:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh