Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

IOB வங்கியின் அலைகழிப்பு: பொதுமக்கள் முற்றுகை!

  • PDF

பரங்கிப்பேட்டை கீரைக்காரத்தெருவில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆயிரக்கணக்காணோர் வங்கி கணக்கு வைத்து உள்ளனர்.

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. அரசு அறிவித்தபடி பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்றால் அங்கு பணம் இருப்பு இல்லை என்று வங்கி அதிகாரிகள் ரூ.2,000 மட்டும் வாங்கிச்செல்லுங்கள் என்று கூறியதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் பெண்கள், முதியோர் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன், வழக்கம்போல காலை 8 மணி முதலே ஏராளமானோர் வங்கி முன் நீண்ட வரிசைகளில் காத்து நின்றனர். ஆனால் காலை 10.30 மணியளவில் ‘வங்கியில் பணம் இல்லை’ என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பரங்கிப்பேட்டை நகர மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் விஜய், பாலமுருகன், ஹசன் முஹம்மது மன்சூர் முயற்சியில் நடை  பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை காவல் துறையினர் சமாதானம் செய்ததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். மேலும் பொதுமக்கள் சார்பில் அப்துல் காதர் மதனி அவர்களின் குறைகளை காவல் துறையினரிடம் தெரிவித்தார். ஆனாலும் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை வங்கிகளில் வங்கி தமது வாடிக்கையாளர்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்குவதாகவும் அலைகழிப்பதாகம் புகார் எழுந்துள்ளது.

Add comment


Security code
Refresh