Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

காயிதே மில்லத் விருது பெற்றார் நஜீர் உபைதுல்லா!

  • PDF

பரங்கிப்பேட்டை: புதுச்சேரி மாநில "குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் சார்பில்" கலை,  இலக்கியம், பண்பாடு, சமுதாய மேம்பாடு  ஆகியவைகளுக்காக பணியாற்றி வருபவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறம் பல்வேறு தலைப்பில் பெயரில் விருதுகள் வழங்கி வருகின்றது. 25-வது ஆண்டு "வெள்ளி விழா"வாக நேற்று புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பரங்கிப்பேட்டை உபைதுல்லாஹ் அறக்கட்டளை நிறுவனர் நஜீர் உபைதுல்லா காயிதே மில்லத் விருது பெற்றார். புதுச்சேரி மாநில முதல்வர் நாரயணசாமி இவ்விருதினை வழங்கினார்.

 

புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் அ. உசேன் தலைமையில் நடந்த விழாவில் புதுவை மாநில வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான், புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் அனிஷா பஷீர்கான், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ், கலிமா ஷேக் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் இவ்விழாவில் கலந்துக் கொள்ளவதற்காக பரங்கிபேட்டையிலிருந்து இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எஸ்.ஓ. செய்யது ஆரிப், நிர்வாகிகள் ஹபிபுர் ரஹ்மான், எஸ். அலாவுத்தீன், அஷ்ரப் அலி, வழக்கறிஞர் செய்யது அன்சாரி, மீராப்பள்ளி நிர்வாகிகள் இஸ்மாயில் (ஆசிரியர்), முஹம்மது மக்தூம், ஏ.ஆர். முனவர் உசேன், மீ.மெ. மீரா உசேன், ராசி ராஜா, காஜா கமால், ஹபீபிய்யா டிரஸ்ட் நிர்வாகி ஹபீப், GTC நண்பர்கள் குழுவினர் மற்றும் நஜீர் உபைதுல்லா குடும்பத்தினர் - உறவினர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு விருது பெற்ற நஜீர் உபைதுல்லாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2016 22:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh