Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரங்கிப்பேட்டை மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் அஞ்சலி!

  • PDF

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 6 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்லாமல் அஞ்சலி செலுத்தினர்.  மறைந்த  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.புதுப்பேட்டை, சலங்குகாரத் தெரு, இந்திராநகர், ஆரிய நாட்டு கிழக்கு தெரு, சின்னூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் விசைப் படகு பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் அஞ்சலி செலுத்தினர். இதனால், 500-க்கும் மேற்பட்ட படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டன.

 

இதுதொடர்பாக பரங்கிப்பேட்டை வத்தக்கரை மீனவ பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி மீனவர்களிடையே கலந்துரையாடினார்.  நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை நகரச் செயலர் மாரிமுத்து, ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், கதர் வாரிய முன்னாள் உறுப்பினர் தன.ஜெயராமன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆர்.வி.சுவாமிநாதன் மற்றும் 6 மீனவ கிராமப் பிரதிநிதிகள் சிறு, குறு மீன் வியாபாரிகள் மற்றும் விசைப்படகு பாதுகாப்பு சங்கத்தினர் பங்கேற்றனர்.

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016 14:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh