Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

சவூதி அரேபியாவிற்கு மருந்துகள் எடுத்து செல்பவரா நீங்கள்..? ஓர் எச்சரிக்கை பதிவு!

  • PDF

சமீப காலமாக, சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் விமான நிலையத்தில் அலோபதி மருந்துககோளடு வந்திறங்கும் பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்து இருப்பின் கைது செய்யப்படுகின்றனர்.

இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு மிக சாதாரணமாக கடைகளில் கிடைக்கும், மற்றும் மருத்துவர்களால் வழங்கப்படும் பல மருந்துகள் சவூதியில் தடை செய்யப்பட்டுள்ளது. இது புதிதல்ல. ஆனால் இப்பொழுது இது தீவிரமாக தம்மாமில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலர் தற்போது சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 வாரமாக விசாரணை கைதியாக இருந்த மூர்த்தி வெங்கடேஷ் என்பவர் மிகுந்த சிரமத்திற்குப் பின்னர் சென்ற வாரம் விடுதலை செய்யப்பட்டார். இதற்காக, மருத்துவ சான்றிதழை, சென்னை தலைமை செயலகம், வெளிநாட்டு அமைச்சகத்தின் முத்திரையுடன் வரவழைக்கப்பட்டது.

அதில் டெல்லி-சவூதி வெளிநாட்டு அமைச்சக முத்திரை பெற்றால் தான் விடுவிக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். மூர்த்தி வெங்கடேஷின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால்,  டான்பாவின், சமூக நல செயலாளர் வாசு, நேரடியாக டெல்லி சென்று ஆவணங்களை பெற்று வந்து சமர்பித்தார். மேலும், மருந்துகள் யாருக்காக வாங்கி வரப்பட்டதோ, அவருக்கு(வயது 65) அந்த மருந்து மிகவும் அத்தியாவசியம் என தம்மாமில் உள்ள மருத்துவரிடம் ஒரு சான்றிதழும் கொடுக்கப்பட்டது.

சரியான நேரத்தில், இந்திய தூதரக உதவியோடு சமயோசிதமாக திரு. வாசு செயல்பட்டதால் மிகப் பெரிய தண்டனை காலத்தில் இருந்து  மூர்த்தி வெங்கடேஷ் காப்பற்றப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  அத்தியாவசிய மருந்துகளை கொண்டு வருபவர்கள், தங்கள் மருத்துவரிடம் நிலைமையைக் கூறி தங்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் தூக்கம், மயக்கம் (steroid) தரக்கூடிய மருந்துகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசிமாகிறது.

இதுகுறித்து, வாசு தெரிவிக்கையில், ஏறக்குறைய மூர்த்தியைப் போல 80 இந்தியர்கள் இன்னும் சிறையில் வாடுகிறார்கள். அவர்களையும் தூதமாக மீட்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். வாழும் நாட்டில் உள்ள சட்டத்தை மதித்து மகிழ்ச்சியாக இருப்போம். அனைத்து மக்களுக்கும் உதவுவோம் என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017 10:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh