Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

நியாயவிலைக்கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கினால் பொதுமக்கள் புகார் செய்யலாம்

  • PDF
நியாயவிலைக்கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கினால் பொதுமக்கள் புகார் செய்யலாம்
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாணமேடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த நாணமேடு ஊராட்சி தூய்மையான கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கிராமத்தில் உள்ள தாய்மார்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், அவர்கள் பாடம் கற்கிறார்களா என்பதை கண்காணித்து குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் தரமான கல்வியை அளித்து வருகிறது. மாணவ– மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி உங்கள் குழந்தைகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்து முன்னேற்ற வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என்பதை பொதுமக்கள் கண்காணித்து தரமற்றவையாக இருந்தால் எங்களிடம் புகார் செய்யலாம். பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கக்கூடாது. பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்ற பெண்களுக்கான திட்டங்களை பயன்படுத்தி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும்.


உங்களுடைய சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். நோய்களை தவிர்க்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நோய்களுக்கான தடுப்பூசிகளை தவறாது போட்டுக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் பேசினார்.

கூட்டத்தில் கடலூர் சப்–கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், உதவி இயக்குனர் (ஊராட்சி) சண்முகம், கடலூர் தாசில்தார் அன்பழகன், ஊராட்சி செயலாளர் புஷ்பராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவா, ஊராட்சி தனி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி, தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Add comment


Security code
Refresh