Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் தமிழக மலைவாழ் மக்கள் ரூ.47 லட்சம் சம்பளம்

  • PDF
அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் தமிழக மலைவாழ் மக்கள் ரூ.47 லட்சம் சம்பளம்
அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் பணிக்கு தமிழகத்தைச்சேர்ந்த மலைவாழ்மக்கள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் பல இடங்களில் பர்மிய மலைப்பாம்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றை பிடித்து அகற்றுவதற்கு புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு கமி‌ஷன் நடவடிக்கை எடுத்தது.

அந்த வகையில், பாம்பு பிடிப்பதில் பிரசித்தி பெற்ற தமிழ்நாட்டின் இருளர் இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் 2 பேர் அந்த பணிக்காக நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள், மாசி சடையன், வடிவேல் கோபால் ஆவார்கள்.

50 வயதை கடந்த அவர்கள் 2 பேரும், மொழிபெயர்ப்பாளர்களுடன் புளோரிடாவுக்கு சென்று, மலைப்பாம்புகளை பிடிக்க 68 ஆயிரத்து 888 டாலர் (சுமார் ரூ.46 லட்சத்து 84 ஆயிரம்) சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.அவர்களும் அதன்படி அமெரிக்காவுக்கு விமானத்தில் பறந்தனர்.

8 நாளில் அவர்கள் 13 மலைப்பாம்புகளை பிடித்து விட்டனர். அதில் ஒரு பாம்பு 16 அடி நீளம் கொண்டதாகும். இவற்றில் 4 பாம்புகளை, முதலை ஏரி தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து பிடித்து அகற்றினார்கள்.பாம்பு பிடிக்கும் கலையை அமெரிக்க வாழ் தொழிலாளர்களுக்கு அவர்கள் கற்றுத்தருவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

Add comment


Security code
Refresh