Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் தேர்வு

  • PDF
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தேசியத் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். தேசிய பொதுச் செயலாளராக பி.கே. குஞ்ஞாலிகுட்டியும், அமைப்புச் செயலாளராக இ.இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. யும், பொருளாளராக பி.வி. அப்துல் வஹாப் எம்.பி.யும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னை ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள அபூசரோவர் போர்ட்டிகோவில் இன்று (26-02-2017) ஞாயிறு காலை 11 மணி அளவில் நடைபெற்றது. 

இக் கூட்டம் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் சாஹிப் முன்னிலையில் நடை பெற்றது.இக் கூட்டத்திற்கு தற்காலிக தேசியத் தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தேசியப் பொருளாளரும், முன்னாள் கேரள தொழிற்துறை அமைச்ச ருமான குஞ்ஞாலிகுட்டி மற்றும் பாராளுமன்ற உறுப் பினர்கள் டி. முஹம்மது பஷீர் அப்துல் வஹாப், தமிழக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மற்றும் கேரள சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அகில இந்திய அளவில் உள்ள மாநிலத் தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என 150 பேர் கலந்து கொண்டனர். 

கடந்த ஜனவரி 31-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது இரு அவைகளும் கூடியிருந்த நிலையில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றிக் கொண்டிருந்த போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை மத்திய அமைச்சராகவும் இருந்த மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து மருத்துவ மனையில் காலமானார். 

அவரின் மறைவுக்கு தேசிய செயற்குழுவில் இரங்கல் தீர்மானமும், பிரார்த்தனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசியத் தலைவர் தேர்தல் நடை பெற்றது.இதில், தற்காலிக தேசியத் தலைவரும், பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசியத் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட் டார். 

அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளராக பி.கே. குஞ்ஞாலிகுட்டியும், அமைப்பு செயலாளராக இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி.யும், பொருளாளராக பி.வி. அப்துல் வஹாப் எம்.பி.யும் நியமனம் செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்டவுடன் அனைவரும் கைதட்டி ஆர வாரம் செய்தனர். பின்னர் சால்வைகள் மற்றும் மாலைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதனையடுத்து, புதிய நிர்வாகிகள் நன்றி தெரிவித்து பேசினர். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் சட்டத் திருத்தங்கள் சம்பந்த மாகவும் தேசிய பொதுக்குழு கூட்டத்திற்கான இடம் மற்றும் தேதியும் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இக் கூட்டத்தில் அகில இந்திய அளவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்தும், தமிழகத்தில் தற்போது நடைபெறும் சட்ட மன்ற விவகாரங்கள் குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இ. யூ.முஸ்லிம் லீகின் நிறுவனநாள் விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு எழுதும் மொழிகளில் உர்தூ, அரபியை மீண்டும் சேர்க்க வேண்டும் சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் சென்னை, பிப்27- இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவன நாள் (மார்ச் 10-ம்தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்றும், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு எழுதும் மொழிகளில் உர்து, அரபியை மீண்டும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் சென்னையில் நேற்று 26.02.2017 நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழுக் கூட்டம் 26.02.2017 காலை 11 மணிக்கு சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலையில் உள்ள ஹோட்டல் அபூ சரோவரில் தேசிய துணைத்தலைவர் மீரட் வழக்கறிஞர் இக்பால் அஹமது தலைமையில் நடைபெற்றது.கேரள தலைவர் செய்யது ஹைதர் ஷிஹாப் தங்ஙள் துவக்க உரையாற்றினார்.இக்கூட்டத்தில் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ. அஹமது சாகிப் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் புதிய தேசிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பெயரை கேரள தலைவர் செய்யது ஹைதர் அலி தங்ஙள் முன்மொழிய அனைவர்களாலும் வழிமொ ழியப்பட்டு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப் மறைந்து 45 வருடங்களுக்கு பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட தக்கதாகும்.தேசிய பொதுச்செயலா ளராக கேரள சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத்தலைவர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி, அமைப்பு செயலா ளர் இ.டி. முஹம்மது பஷிர் எம்.பி., பொருளாளர் பி.வி. அப்துல் வகாப் எம்.பி. ஆகியோ ரும் ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டனர்.இக்கூட்டத்தில் கீழ்க் காணும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இ. அஹ்மது சாகிபு மறைவுக்கு இரங்கல்

இந்திய நாட்டின் தன்னிக ரற்ற தலைவர்களில் ஒருவரான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிப் அவர்களின் திடீர் மறைவுக்கு இந்த கூட்டத் தின் மூலம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.அவரது பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத் துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரங்கில் அவரது ஆளுமைத் திறன் மற் றும் அரசியல் ஈடுபாட்டில் உள்ள திறன் வெளிப்பட்டுள் ளது.முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் தலை வர் என்ற அடிப்படையில் இந்தியாவிலுள்ள சிறுபான் மையினருக்கு வழி காட்டும் துருவ நட்சத்திரமாக திகழ்ந்தார்.நேர்மை மற்றும் கண்ணியத் தின் இலக்கணமாகவும், சிறு பான்மையினர் நலனுக்காக குரல் கொடுப்பவரும் ஒரு மிகப் பெரிய ஜனநாயகவாதியுமான இ.அஹமது சாஹிப் இந்தியா வின் மதச்சார்பற்ற தன்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் ஒரு அடையாள சின்னமாக திகழ்ந்தார்.அரசியல்வாதி என்ற அடிப் படையில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். கொள்கை ரீதியாக கொள்கைரீதியாக மற்றவர்களுடன் கருத்து வேறு பாடுகள் உள்ள நிலையிலும் அவருக்கு அரசியல் எதிரிகள் யாரும் கிடையாது. அமைச்ச ராக இருந்தபோது, அரபு நாடு களுடனான இந்தியாவின் உறவு நெருக்கமாக இருந்தது. இந்தியா மற்றும் முஸ்லிம் நாடு களுக்கிடையே உள்ள தொடர்பு வலுவாக இருந்தது..அனைவருடனும் நட்புற வுடன் திகழும் இ. அஹமது சாஹிபை ஒவ்வொருவரும் நேசித்தனர். ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு தாராளமாக உதவி செய்பவர். நாட்டின் முக்கியப் பிரமுகர்களில் தனி முத்திரை பதித்தவர். அவரது மறைவு சிறுபான்மை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பா கும்.அவரது மஃபிரத்துக்காக வும், மறுமை வாழ்வு சிறக்கவும் அனைவரும் பிரார்த்திப்போம். ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனம் கிடைக்க துஆ செய்வோம். அவரது அமல் களை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

விவசாயிகள் எதிர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்

இயற்கை எரிவாயு திட்டத்தை அமுல் படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிரா மத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய பெட்ரோலிய அமைச்ச கம் அனுமதிக்க உள்ளது என்ற செய்தி காட்டுத் தீ போல் விவசாயிகள் மத்தியில் பரவியதால் ஊரில் உள்ள எல்லோரும் வெளிக்கிளம்பி இயற்கை எரிவாயு திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.விவசாயம் பாழ்பட்டுவிடும், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவர் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டு இத்திட்டத் திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கவலை மற்றும் சந்தேகங்களை போக்கும் வகையில் விரைவாக அம்மக்களுடன் கலந்துரை யாடி விளக்கமளிக்க வேண் டும் என்றும் அவசர கதியில் இத்திட்டத்தை அமல் படுத்த வேண்டாம் என இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

சிலெட் தேர்வால் சிறுபான்மை மொழிகளுக்கு பாதிப்பு

தமிழக அரசு நடத்தும் ஸ்டேட் லெவல் எஜுகேஷனல் டெஸ்ட் (சிலெட்) தேர்வில் சமஸ்கிருதம், உர்து, அரபி, மற்றும் தெலுங்கு மொழிகளில் தேர்வு எழுதும் முறை இதுநாள் வரை பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்களே கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றவராகின்றனர். தமிழ கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 40க்கும் மேற்பட்ட அரபி பேராசிரியர்களும், 15க்கும் மேற்பட்ட உர்து பேராசிரியர் களும் பணிபுரிகிறார்கள். இத்த கைய பதவிகளுக்கு செல்ல விரும்புவோர் சிலெட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது சிலெட் தேர்வு எழுதுவதற்கு உர்து மற்றும் அரபி மொழிகள் சேர்க்கப்பட வில்லை. சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளே சிலெட் தேர்வுக் குரிய மொழிகளாக அறிவிக் கப்பட்டுள்ளன. இது சிறுபான்மை மொழிக்கிடையே காட்டப்படும் பாரபட்சமாகவும், அநீதியாகவும் கருதுகிறோம்.எனவே தமிழக அரசு சிலெட் தேர்வில் மீண்டும் உர்து மற்றும் அரபி மொழிகளையும் சேர்த்து சிறுபான்மை மொழி களின் பாதுகாப்புக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிட இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு

எதிர்வரும் மார்ச் 10ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு நிறுவன நாள் விழாவை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விமரிசையாக கொண்டாடு வதென இக்கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70வது ஆண்டு நிறுவனநாளையொட்டி 11.03.2017 தமிழ்நாட்டில் திருநெல் வேலியில் பொருட்காட்சி மைதானத்தில் பல லட்சம் பேர் பங்கேற்கும் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு - வரலாற்று கண்காட்சி விமரிசிசையாக நடைபெறுகிறது. இம்மாநாட்டில் திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கரி. ராமசாமி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய , மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டிற்கு அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதி கள் பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டும் கொள்கிறது.
 
தமிழக மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் தேசிய, மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி எம்.எல்.ஏ நன்றி கூற, மௌலவி ஏ. ஷபிகுர் ரஹ்மான் துஆ வோடு நிறைவுபெற்றது. 

Add comment


Security code
Refresh