Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி வழிகாட்டி

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தால் ரூ.20 ஆயிரம் ஊக்கப்பரிசு

  • PDF

சென்னை, அக்.31-

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை தமிழில் சமர்ப்பித்தால் ரூ.20 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறினார்.

சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் கூட்டம் துணைவேந்தர் திருவாசகம் தலைமையில் நேற்று நடந்தது. பதிவாளர் பி.சரவணன் முன்னிலை வகித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 1 மணி வரை நீடித்தது. கூட்டம் முடிவடைந்த பிறகு துணைவேந்தர் திருவாசகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ஜினீயரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், கல்வி ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் அண்ணா பல்கல....

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் கால்நடை அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகம்

  • PDF

சென்னை, அக்.31-

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழில் கால்நடை அறிவியல் பட்டப்படிப்பு கொண்டுவரப்பட உள்ளது என்று துணைவேந்தர் டாக்டர் ரா.பிரபாகரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பதவி ஏற்ற டாக்டர் ரா. பிரபாகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கால்நடை அறிவியல் பல்கலைக்கழக படிப்புகள் அனைத்தும் சிறந்து விளங்குகின்றன. இருப்பினும் மேலும் வலுசேர்க்க பாடுபடுவேன்.

அண்ணாபல்கலைக்கழகத்தில் தமிழில் என்ஜினீயரிங் படிப்பு கொண்டுவந்தது போல தமிழ்நாடு அறிவியல் பல்....

அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித் தொகை

  • PDF

சென்னை, அக். 26: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் 2011 ஜனவரி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் முழுநேர ஆராய்ச்சியில் ஈடுபடும் 45 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆராய்ச்சி மாணவருக்கும் கல்வி உதவித் தொகையாக ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரம் வழங்கப்படும். மேலும் புலமை நிதியுதவியாக ஆண்டுக்கு 25 ஆயிரமும் வழங்கப்படும்.  அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

பொறியியல், தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் தி....

சிவந்தி அகாடமி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 20-ந் தேதி தொடங்கும்

  • PDF

சென்னை, அக்.22-

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர்பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வழிகாட்டும் வகுப்புகளை சிவந்தி அகாடமி நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 20-ந் தேதி தொடங்குகிறது.

ïனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்னும் அமைப்பு இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), காவல்துறைப்பணி (ஐ.பி.எஸ்.), வெளிநாட்டு தூதரகப்பணி (ஐ.எப்.எஸ்.) போன்ற உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ``எம்பிளாய்மெண்டு நிïஸ்'' என்ன....

உதவித்தொகையுடன் ராணுவ பள்ளியில் படிக்க புதுச்சேரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

  • PDF

புதுச்சேரி, அக். 20:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள ராணுவப்பள்ளியில் புதுவை மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் சுந்தரவடிவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளியில் 2011&2012ம் கல்வியாண்டில் 6 மற்றும் 9 வகுப்பு மாணவர்கள்(ஆண்கள் மட்டும்) சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பள்ளியில் சேர ஆர்வமுள்ள புதுவையை சேர்ந்த மாணவர்கள் வரும் டிசம்பர் மாதம் 10ம் தேத....