Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி வழிகாட்டி

எம்.பில்., தேர்வு விண்ணப்பம்

  • PDF

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையின் தொலைநிலை கல்வியில் எம்.பில்., (அல் பருவம்) படிப்போருக்கு நவ., 19ல் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப். 20 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை பூர்த்தி செய்து அக். 19 க்குள் வழங்க வேண்டும். அக். 26 வரை 100 ரூபாய் அபராதத்துடன் வழங்கலாம். விண்ணப்பங்களை தேர்வாணையர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்திலோ (www.mkudde.org) மூலம் பெற்றோ அனுப்ப வேண்டும். தபாலில் அனுப்புவோர் 15 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய சுயமுகவரியிட்ட தபால் கவரை இணைத்து அனுப்ப வேண்டும்.

கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Source: Dinamalar

இக்னோ - தேர்வு அறிவிப்பு

  • PDF

மதுரை : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை (இக்னோ)யில் டிசம்பரில் நடக்க உள்ள பருவத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி அக். 30. இதன்பின், விண்ணப்பிப்போர் தாமத கட்டணமாக 300, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் என செலுத்த வேண்டும்.  மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், கீழக்கரை, சாத்தூர், நெல்லை, ஆய்க்குடி, தூத்துக்குடி, ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை மையங்களில் தேர்வுகள் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, "இயக்குனர், இக்னோ மண்டல மையம், சிக்கந்தர்சாவடி, அலங்காநல்லூர் ரோடு, மதுரை' ....

மதுரை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் பட்டயப்படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

  • PDF

சென்னை, செப்.30-

மதுரை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ள மருந்தியல் பட்டயப்படிப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவம் நாளை முதல் வரும் 15-ந் தேதி வரை வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் (2010-2011) இரண்டு ஆண்டு மருந்தியல் பட்டயப்படிப்பு தொடங்கப்படுகிறது. இதில் மாணவர்களை சேர்க்க மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் நாளை (அக்டோபர் 1) காலை 10 மணி முதல் ....

சப்-இன்ஸ்பெக்டர் நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி - மனித நேய அறக்கட்டளை ஏற்பாடு

  • PDF

சென்னை, செப்.24-

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி அளிக்க உள்ளது.

சென்னையில் சைதை துரைசாமியை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் மனிதநேய அறக்கட்டளையானது, ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2, கிராம நிர்வாக அதிகாரி தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கும், மத்திய அரசின் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளித்து வருகிறது. இங்கு பயிற்ச....

கடலூரில் தொழில் முனைதல் & திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்

  • PDF