Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

ஸவூதியில் தடையை மீறி கார் ஓட்டும் பெண்கள்

  • PDF
ஸவூதி அரேபியாவில் தடையை மீறி பெண்கள் கார் ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கும் சட்டங்கள் இல்லாவிட்டாலும், அங்கு பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் மறுக்கப்பட்டு வருகிறது. இதனை மீறும் வகையில் 2 கட்ட பிரசாரத்தை பெண்ணுரிமை அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. அதன்படி, பெண்கள் கார் ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ஸவூதியில் மருத்துவர் பணி வாய்ப்பு

  • PDF

ஸவூதியில் மருத்துவர் பணி வாய்ப்பு குறித்து, தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், ஸவூதி அரேபிய அமைச்சகத்தின் அரசு சுகாதார மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெருமளவில் தேவைப்படும் கண்சல்டண்ட், சிறப்பு மற்றும் ரெசிடென்ட் மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு, பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை போன்ற நகரங்களில் 31.8.2013  முதல் 7.9.2013 வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருட அனுபவத்துடன் 55 வயதிற்குட்பட்ட கண்சல்டண்ட் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 45 வய....

குவைத்தில் நோன்புக் கஞ்சியுடன் இஃப்தார் நிகழ்ச்சிக​ள்

  • PDF
K-Tic Ramdhan 2013 Ifthar 4

குவைத்தில் முதல் முறையாக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) முதன் முறையாக குவைத் வாழ் தமிழ் நோன்பாளிகள் நோன்பு திறக்க வசதியாக ரமழான் மாதம் முழுவதும் தமிழக நோன்புக் கஞ்சியுடன் இஃப்தார் நிகழ்ச்சிகளை K-Tic சங்கத்தின் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்துள்ளது.

தினந்தோறும் நோன்பு திறக்கும் ....

ஒரு கிலோ குறைந்தால் ஒரு கிராம் தங்கம் பரிசு

  • PDF

ஒரு கிலோ உடல் எடையைக் குறைத்தால், ஒரு கிராம் தங்கம் கிடைக்கும் என்கிறது அரசு, ஆனால், இங்கல்ல... ஐக்கிய அரபு அமீரகத்தில்.

உடல் பருமன் என்பது உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் பிரச்னை. அதனால், உடல் நலக் கோளாறுகள், நோய்கள் அதிகரிக்கும் காரணத்தால், பணித் திறன் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படுவதாக கருத்து இருக்கிறது.

எனவே, உடல் எடையைக் குறைக்க பல்வேறு தரப்பினர் பல வழிகளை கையாளும் நிலையில், ஐக்கிய அரபு அமீரக அரசின் முயற்சி வித்தியாசமானது. ஒரு கிலோ எடையை குறைத்தால் ஒரு கிராம் தங்கம் பரிசு ....