Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

பஹ்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம்

  • PDF

பஹ்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முக்கியச் சாலைகளில் கார் டயர்களை தீவைத்துக் கொளுத்தி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், தலைநகர் மனாமாவில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. கலவரக்காரர்களைக் கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஃபார்முலா-ஒன் கார் பந்தயம் நடக்க இருக்கும் நிலையில், பார்முலா ஒன் கார் பந்தயத்தின்போது, உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக, போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

ஈரான் நிலநடுக்கம் - அரபு நாடுகளில் வீதியில் குவிந்த மக்கள்!

  • PDF
துபாய்: ஈரானில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.0, 7.8 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஈரான், பாகிஸ்தான் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. துபையிலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013 13:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

ஈரான் நிலநடுக்கத்தில் 37 பேர் பலி

  • PDF

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் முதல் அணு உலை அமைந்துள்ள புஷெர் நகருக்கு 96 கி.மீ தென் கிழக்கே காக்கி நகர் இந்த நில நடுக்கத்தால் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் அடைக்கலம் புகுந்தனர். இருப்பினும் இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 37 பேர் பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கானோர் ....

புதன்கிழமை, 19 ஜூன் 2013 12:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

வளைகுடாவில் நிலஅதிர்வு!

  • PDF

தம்மாம்:  தெற்கு ஈரானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக துபாய், சார்ஜா, தம்மாம், அல்கோபார், தோஹா போன்ற நகரங்களில் சில நொடிகள் தெளிவாக உணரப்பட்டது.

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013 00:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது