Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

இக்னோ பல்கலையில் ஆன்லைன் மூலம் இலவசப் பாடத் திட்டங்கள்

  • PDF

"இக்னோ பல்கலையில் 'இ-ஞான்கோஸ்' கல்வி இணையதளத்தின் மூலம் 2000கும் மேற்பட்ட பாட விளக்கங்களின் வீடியோ தொகுப்பை, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக படிக்கலாம்,'' என, பல்கலை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.

பல்கலை பேராசிரியர்கள், பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் அவர் பேசியதாவது:

பல்கலையில் 530 பாடத்திட்டங்கள், மதுரை மண்டலத்தில் 120 பாடத்திட்டங்கள் உள்ளன. முதன்முதலாக இணையதளத்தின் மூலம் 2000க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள், கருத்தரங்க தகவல்களை வெளியிட்டுள்ளோம். 'ஆன்லைன்' மூலம் மாணவர்கள் இலவசமாக படிக்கலாம். அடுத்த மாதத்தில் 'ஞான் வாணி' பண்பலை, மதுரை மண்டலத்தில் துவங்க உள்ளது.

இதில் 'டோல் ப்ரீ' எண் மூலம், மாணவர்கள், நிபுணர்களுடன் இலவசமாக கலந்துரையாடலாம். சென்னை....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

நீங்கள் டிப்ளமோ சிவில் படித்தவரா?

  • PDF

'தானே' புயல் வீடுகள் கட்டுமானப் பணிக்கு தகுதியுள்ள டிப்ளமோ சிவில் மனுதாரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 'தானே' புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 90 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இப்பணிகளை துரிதப்படுத்த 180 டிப்ளமோ சிவில் படித்த மனுதாரர்கள் தேர்வு செய்ய கடந்த டிசம்பரில் தேர்வு நடந்தது. இதில் தகுதியுடைய மனுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

தற்போது 25 பணியிடங்கள் காலி....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

+2 செய்முறைத் தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

  • PDF

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் குறிப்பிட்ட தேதியில் பங்கேற்க முடியாதவர்கள் வரும் 18-ம் தேதிக்குள் தேர்வில் பங்கேற்கலாம்.
 
பிளஸ் 2 அரசு செய்முறைத் தேர்வுகள் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வு வரும் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 
கடலூர் மாவட்டத்தில் 182 பள்ளிகளைச் சேர்ந்த 31 ஆயிரத்து 725 மாணவர்கள் அவர்களுக்குரிய பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை குறிப்பிட்ட நாள்களில் எழுதுகின்றனர். 140 மையங்களில் செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
 
தற்போதுள்ள நடைமுறையின்படி, செய்முறைகள் உள்ள பாடங்களில் எழுத்து....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரைப் போட்டி

  • PDF

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடலூர் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
 
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே தமிழ் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தவுள்ளது.
 
இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் பங....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர்–நடத்துனர் காலி பணியிடங்கள்

  • PDF

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்துக்கு 20 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிட பட்டியல் கடந்த ஜூலை மாதம் அனுப்பி நேர்காணல் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக 140 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான பட்டியல் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட மனுதாரர்களை தவிர்த்து பிற மனுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான தகுதி 10–ம் வகுப்பு மற்றும் ஐ.ஆர்.டி. தேர்ச்சி அல்லது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உரிமங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பானது, குறைந்த பட்சம் 24 அதிகபட்....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது