பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்!

பரங்கிப்புட்டை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பு முகாமிற்கு வட்டர மருத்துவ அலுவலர் மருத்துவர் அமுதா தலைமை தாங்கினார். சிறப்பு மருத்துவ முகமினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்து பேசுகையில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திட்டங்கள் யாவும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் நீண்ட கால பயனினை அளிக்கும் வெற்றி திட்டங்களாகும். அந்த வகையில் தமிழக மக்களுக்கு அதிக பயன் தரும் வகையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தினை மாற்றி அமைத்து அதனை வெற்றி பெற்ற திட்டமாக மாற்றி காட்டியவர் ஆவார் என்றார்.

மேலும் மருத்துவ சேவைகள் கிராம புறத்தில் உள்ள அனைவருக்கும் கிடைத்திடவேண்டும் என்ற உயரிய நோக்கில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசின் சுகாதார துறையின் மூலம் கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இக்கிராமத்தில் நடைபெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சைகள், மகப்பேறு தொடர்பான அலோசனைகள், பொது மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சை தொடர்பான அலோசனைகள், சித்த மருத்துவம் தொடர்பான அலோசனைகள், மற்றும் பல்வேறு மருத்துவம் தொடர்பான முதற்கட்ட சிறப்பு சிகிச்சைகள், மற்றும் மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகின்றது என்றும் மேல் சிகிச்சைகளுக்காக பரிந்துரை செய்யபடுவோர் மான்புமிகு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேவையான உயரிய சிகிச்சைகள் வழங்கப்படும் என்றும் ஆகவே பொது மக்கள் இம்முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பொது மக்களின் பார்வைக்கு டெங்கு காய்சல் விழிப்புணர்வு மற்றும் ஊட்டசத்து பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னால் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய கழக செயலாளர் அசோகன், அவைத்தலைவர் கோ.வி.ராசாங்கம், மு.மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கன், நிர்வாகிகள் செழியன், மாரிமுத்து, ஆர்.வி.சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், சரண்யா, மிதிலைராஜ், தீபக், பிருந்தா மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவர் பாலாஜி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை மற்றும் மருத்துவ அலோசனைகளை அளித்தனர். முடிவில் ஆயிபுரம் மருத்துவ அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 17:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru